Home சினிமா ஓட்டுனராக மாறிய ராதிகா

ஓட்டுனராக மாறிய ராதிகா

11
0
SHARE

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன் நடிக்கும் படம்இப்படை வெல்லும்’. வருகிற 9&ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தைலைகா புரொடக்ஷன்ஸ்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் உதயநிதியின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். இப்படத்தின் கதைப்படி ராதிகா பயணிகள் பயணிக்கும் பஸ்ஸை ஓட்ட வேண்டும்.

இந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்றால் ராதிகாவே அந்த காட்சியில் நிஜமாக நடிக்க வேண்டும் என்று விரும்பிய இயக்குனர் கௌரவ் நாராயணனின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ராதிகாவும் மூன்று நாட்கள் பஸ்ஸை ஓட்டும் பயிற்சி எடுத்து அந்த காட்சியில் நடித்துள்ளார்.

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகளுடன் ராதிகா பல மைல் தூரம் அந்த பஸ்ஸை ஓட்டி செல்வது மாதிரி படமாக்கப்பட்டுள்ள அந்த காட்சிஇப்படை வெல்லும்படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்குமாம்! உதயநிதி, மஞ்சிமா மோகன், ராதிகா முதலானோருடன் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here