Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி 28

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி 28

28
0
SHARE

பேரிடர் காலங்களில்:

செல்போன் சேவைகள் எல்லாம், வியாபாரமயமாகிவிட்டது, அவர்களை சார்ந்தே நாம் இருக்க வேண்டிய சூழல். ஆனால் அமெச்சூர் வானொலி சேவையானது அப்படியானது அல்ல. தனி மனிதர்களால் நடத்தப்படுவதால் எந்த ஒரு புள்ளியிலும் இது இணைவதில்லை. அதன் காரணமாக, எந்த வித தாக்குதலுக்கும், இடையூறுகளுக்கும் உள்ளாவதில்லை. அப்படியே உறுவானாலும் அதனை ஹாம்கள் உடனடியாக சரி செய்துவிடுகின்றனர்.

அமெச்சூர் வானொலியை இயக்குபவர்கள் பெரும்பாலானோருக்கு எப்படி பேரிடர் காலத்தில் வானொலிகளை அமைக்க வேண்டும் என்பது தெரியும். கிடைக்கக் கூடிய மின்சாரத்தினை வைத்தும், அப்படியே இல்லையென்றாலும், கிடைக்கக்கூடிய பேட்டரியை கொண்டு அமெச்சூர் வானொலியை இயக்கப் பழகியவர்கள். பெரும்பாலான அமெச்சூர் வானொலிகள் கார்களில் இருக்கும் பேட்டரியைக் கொண்டே பேரிடர் காலங்களில் இயங்குகிறது.

இதற்காக பேரிடர் இல்லாத காலங்களில் திவீமீறீபீ ஞிணீஹ் என்ற ஒரு நாளை ஏற்படுத்தி, அதில் வசதிகளே இல்லாத இடத்தில் அமெச்சூர் வானொலிகளை செயல்படுத்திப் பழகுவர், இது போன்ற பயிற்சிகளினால், உண்மையான பேரிடர் காலங்களில், எந்த வித பதட்டமும் இல்லாமல், சமூகத்திற்கு சேவை செய்யப் பழகிவிடுகின்றனர்.

வானொலிப் பெட்டி

அமெச்சூர் வானொலிப் பெட்டி மட்டுமே இருந்தால் பேரிடர் காலங்களில் தப்பித்துக் கொள்ளலாமா? என்றால் இல்லை. அமெச்சூர் வானொலிப் பெட்டி இல்லாதவர்கள் என்ன செய்ய? உரிமம் உள்ளவர்களால் மட்டுமே அமெச்சூர் வானொலியை வைத்திருக்க முடியும். அதனால் தான், சாதாரண வானொலிப் பெட்டிகளையும் கைவசம் வைத்திருப்பது நலம். அதற்கு காரணம், ஒரு சில அமெச்சூர் வானொலிப் பெட்டிகளில் சாதாரண வானொலிகளை கேட்க முடியாது. அதில் தான் அரசு ஊடகங்கள், பேரிடர் கால அறிவிப்புகளை செய்கின்றன. அதனால் சாதாரண எஃப்.எம். அல்லது இரண்டு ஙிணீஸீபீகளை கொண்ட வானொலிப் பெட்டியை வைத்திருப்பது அவசியமாகிறது.

இது போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் செயல் இழந்துவிடுகின்றன. ஆனால் வானொலிக்கு சாதாரண பேட்டரி இருந்தாலே போது, அதுவே ஒரு மாதத்திற்கு இயங்கக் கூடியதாக இருக்கிறது. கைப்பேசிகளுக்கு டவர் இல்லையென்றால் ஒன்றும் பயன் இல்லை. மழைக் காலங்களில் அனைத்து நெட்வொர்குகளுமே மின்சாரம் இல்லாததால் நிறுத்தப்படுகின்றது. அதனால் முற்றிலுமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

டி.விக்களுக்கும் மின்சாரம் தேவை, வானொலிப் பெட்டி போன்று பேட்டரியில் இயங்கும் தொலைக்காட்சி பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் பேட்டரியில் இயங்கும் வானொலிப் பெட்டிகள் ஏராளமாக சந்தையில் விற்பனைக்கு உள்ளது. ஆனால் நாம் தான் யாரும் வாங்கத் தயாராக இல்லை. காரணம், நாமெல்லாம் எந்த வித சூழலிலும் இயற்கை சீற்றங்களிலோ, பேரிடர்களிலோ சிக்கிக் கொள்ள மாட்டோம் என்ற வெற்று நம்மிக்கை.

உதாரணங்கள்

பல்வேறு நாடுகளில் பேரிடர் காலங்களில் அமெச்சூர் வானொலியின் சேவை மிக முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 நடந்த தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. உலக வர்த்தக மையமானது மான்ஹாட்டன் பகுதியில் தகர்க்கப்பட்ட போது, அனைத்து தொடர்பியல் சாதனங்களும் செயலற்று போனது. அன்றும் அமெச்சூர் வானொலியின் உதவி, அளப்பறியது. அதேப் போன்று 2003 வட அமெரிக்காவில் ஏற்பட்ட ஙிறீணீநீளீஷீut, 2005ல் நடைபெற்ற காத்திரினா ஹரிக்கேன் புயல் போன்றவற்றின் போது ரெட்கிராஸ் அமைப்புடன் இணைந்து பல்வேறு உதவிகளை அமெச்சூர் வானொலிகள் செய்து வந்துள்ளது.

இந்தியாவிலும், பூச், பத்திரிநாத், ஆந்திரா, அந்தமான், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களின் போது, அமெச்சூர் வானொலியினர் தான் முன்னின்று உதவிகளை செய்தனர்.

அனைத்துமக்களுக்கும்தேவையானஉதவிகளை, அரசுடன் இணைந்து செயல்படுத்துவதில் முதன்மையாகத் திகழ்பவர்கள் தான் இந்த ஹாம்கள். 2006 டிசம்பர் 6, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் போது, அனைத்து மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். காரணம், சுனாமி என்ற ஒன்றையே அறியாத நாடு இந்தியா. அந்த சமயத்தில் சுனாமி என்றால் என்ன, அது எப்படி வருகிறது? போன்ற விபரங்களை அமெச்சூர் வானொலியில் ஒலிபரப்பி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

எப்படி செயல்படுகிறார்கள்?

அனைத்து ஹாம்களும், பேரிடர் காலங்களில் எப்படி செயல்படவேண்டும், என்ற அடிப்படை பயிற்சியை எடுத்துள்ளனர். அது மட்டுமல்லாது, பொதுச் சேவையில் ஆர்வமுள்ளவர்களாகவும் இவர்கள் இருப்பர். பேரிடர்காலங்களில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கும் தயாராக இருப்பர். முக்கியமாக உடனடியாக எங்கு வேண்டுமானாலும் சென்று அமெச்சூர் வானொலியை அமைக்கத் தயாராக இருப்பர்.

பேரிடர்காலங்களில் அமெச்சூர் வானொலியில் உறுதிப்படுத்தாத எந்தத் தகவல்களையும் பரப்புவது கூடாது. காரணம், மக்களை பீதி அடையக் கூடியத் தகவல்கள், இன்றைய சமூக ஊடகங்கள் உள்ள காலத்தில் எளிதாக அனைத்து மக்களையும் கொண்டு சென்றுவிடும். அதனால் அமெச்சூர் வானொலியில் ஒலிபரப்புபவர்கள் தெளிவான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே ஒலிபரப்புவர். தங்களிடம் உள்ள வானொலிப் பெட்டியில் அரசு வானொலி கொடுக்கும் அறிவிப்புகளை தொடர்ந்து கேட்டு, அதற்கு தகுந்தார் போல் அமெச்சூர் வானொலியில் ஒலிபரப்புவர்.

பேரிடர் வருவதற்கு முன்

அமெச்சூர் வானொலி வைத்திருப்பவர்கள் அனைத்து வானொலிப் பெட்டிகளையும் தயார் நிலையில் வைத்திருப்பர். கைவசம் உள்ள அனைத்து பேட்டரிகளையும் முழுமையான சார்ஜ் செய்து வைத்திருப்பர். மிக முக்கியமாக வானிலை மையம் கொடுக்கும் அதிகாரப்பூர்வமானத் தகவல்களை மட்டுமே அமெச்சூர் வானொலியில் பகிர்ந்துகொள்வர்.

உள்ளூரில் உள்ள வெள்ளத் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பர், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வரும் அதே சமயத்தில், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப அமெச்சூர் வானொலி ஊடாக அறிவிப்புகளை வழங்குவது, முடிந்த மட்டும், நேரடியாக பாதிப்புக்குள்ளான இடத்திற்கே சென்று உதவுவது ஹாம்களின் தலையாய கடமையாக உள்ளது.

ஏற்னவே கூறியபடி பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்து வைத்திருப்பதுடன், கயிறு, பேட்டரி லைட்கள் ஆகியவற்றையும் எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருப்பர். இவை மட்டுமல்லாது, முதலுதவிப் பெட்டி, வெள்ளம் அனைத்து பகுதிகளுக்கும் பாய்வதால் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பாம்புக் கடிக்கான மருந்துகளையும் வைத்திருப்பர். அத்துடன், குடிதண்ணீர் மாசுபடுவதால், அதனை குடிப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு, எனவே அதற்கான மருந்துகளையும் கைவசம் வைத்திருப்பர்.

பாம்புகளின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டிய முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியம், மேலும், கைவசம் அதிகப்படியான இரண்டு குடைகளை வைத்திருப்பதுவும் அவசியமாகும். ஆண்டனாக்களை உயரத்தில் கட்டுவதற்கு வாங்கிய மூங்கில் கம்புகளைப் போன்று கூடுதலாக இரண்டு கம்பு வைத்திருப்பதுவும் அவசியமாகிறது. காரணம், சென்னை போன்ற நகரங்களில் வழக்கமான தெருக்களே மழைக்காலங்களில் படகு சவாரி செய்யும் கால்வாய்களாக மாற்றமடைந்து விடுகின்றன.

மனிதர்களுக்கு ஆறு அறிவு உண்டு, அதனால் தான் நீர் நிலைகளை எல்லாம் குடியிருப்புகளாக மாற்றி விட்டான். இது கால்நடைகளுக்கு தெரியாது அல்லவா? அதனால் அவற்றை முடிந்தமட்டும் வெள்ளம் ஏற்படக்கூடிய நாட்களில் கட்டி வைப்பது கூடாது. அதன் பாதுகாப்பை அது நன்றாகவே அறிந்திருக்கும். எனவே மழைகாலங்களில் கால்நடைகளை எப்படி வைத்திருக்க  வேண்டும்? என்பது பற்றிய அறிவிப்பினை அவ்வப்போது அமெச்சூர் வானொலியில் செய்வது அவசியமாகிறது.

பேரிடரின் போது

வெள்ளம் வருவதற்கு முன் அமெச்சூர் வானொலிகள் என்ன செய்தனவோ, அதை விட அதிகமாக வெள்ள சூழ்ந்துள்ள போது செய்ய வேண்டியிருக்கிறது.  குறிப்பாக வீடுகளில் தண்ணீர் புகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும், அப்படியே புகுந்தாலும் அதற்கு தகுந்த செருப்புகளை அணிந்திருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று வெள்ளத்தின் பொழுது அமெச்சூர் வானொலிப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே சுற்றிக் கொண்டு இருக்கக்கூடாது. குறிப்பாக கழிவு நீர்க் கால்வாய்களுக்கு அருகிலும், வாய்கால்களுக்கு அருகிலும் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நல்ல உயரத்தில் ஆண்டனாக்களை அமைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறேன் என்று மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடக்கூடாது. முதலில் பாதுகாப்பு அவசியம், அதன் பின்தான் சேவை. எனவே, பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முன்னர், மின்சார கம்பங்கள் அருகில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆண்டனாக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைப்பது நலம்.

காரணம், காற்றுடன் பலத்த மழை பெய்தால், கம்பத்தில் செல்லும் வயர்கள் ஆண்டனாக்களின் மீது விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மின்சார கம்பங்களுக்கு அருகில் ஹாம் வானொலிக்கான ஆண்டனா அமைத்திருந்தால், அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிடுவது நல்லது. பொது மக்களையும் பாதையில் செல்லும் பொழுது பார்த்துச் செல்லுமாறு கூறவேண்டும்.

அமெச்சூர் வானொலியில் ஒலிபரப்புவர்கள், நம் ஒலிபரப்பினை யார் கேட்பார்கள் என்று மெத்தனமாக இயற்கை சீற்றங்களின் போது இருந்துவிடக்கூடாது. குறிப்பாக சிற்றலையில் ஏழு மெகா ஹெர்ட்ஸில், ஒலிபரப்பும் பொழுது அனைத்து நேயர்களும் கேட்பதற்கு வாய்ப்புண்டு. அந்த சமயங்களில் பொது மக்களுக்கு தேவையான பொது அறிவிப்புகளை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

பொது அறிவிப்புகளில் முக்கியமாக, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் வெறும் வயிற்றுடன் இருக்க அனுமதிக்கக் கூடாது. வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளில் பிளீச்சிங் பவுடரைப் தூவி நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் அவ்வப்போது செயதய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும், கிடைக்காத பட்சத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடலாம். வீட்டில் தயாரித்த உணவுகளை மூடி வைப்பது மிகவும் அவசியமாகும்.

அமெச்சூர் வானொலியில் அறிவிக்கும் பொழுது, மிக முக்கியமாக குடிக்கும் தண்ணீரை நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின்னரே குடிக்க அறிவுறுத்த வேண்டும். அப்படி சூடு படுத்தி குடிக்க வாய்ப்பு இல்லை எனில், தண்ணீரில் மருத்துவர்களின் அலோசனையின் பேரில் குளோரின் மாத்திரைகள் கலக்கி குடிக்க அறிவுறுத்த வேண்டும்.

பேரிடர் முடிந்த பின்

பேரிடர் முடிந்த பின்னர் தான் அமெச்சூர் வானொலிக்கு பெரிய பொருப்புகள் உள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரே பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் இருந்து செல்ல அனுமதிக்க வேண்டும். அதற்கான சரியான தகவல்களை அரசு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.  குழந்தைகளை கண்டிப்பாக  நீர் நிலைகளின் அருகில் விளையாட அனுமதிக்கக் கூடாது. மின்சாரம் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மழை வெள்ளத்தின் பொழுது சேதமடைந்த எலக்ட்ரானிக் பொருட்களை முறையாக எலக்ட்ரீசியனை வைத்து சோதித்த பின்னரே மின்சாரத்தில் இணைத்து பயன்படுத்த வேண்டும். வெள்ளம் வடிந்த பின் தெருவில் மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும், காரணம், கண்ணாடித் துண்டுகள், பாதுகாப்பில்லாத பாலங்கள், உடையும் தறுவாயில் உள்ள மின்சார கம்பங்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெச்சூர் வானொலியை இயக்குபவர் ஒரு நல்ல குழுவை தன்னகத்தே வைத்திருப்பது அவசியமாகும். வெள்ளம் வடிந்த பின் இயல்புநிலைக்குத் திரும்ப  ஒரு வார காலமாகும், அந்த சமயங்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு களத்திற்கு சென்று உதவி செய்ய தன்னார்வளர்களை ஒன்றிணைத்து வைத்திருப்பது அவசியமாகிறது. பேரிடர்காலத்தில் உதவுவதற்காக அரசு பல்வேறு மையங்களை ஏற்படுத்தி, அவசர காலத் தொடர்புகளுக்கு தொலைப்பேசி எண்களை கொடுத்திருப்பர். அவற்றை ஹாம்கள் குறித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

காரணம், பேரிடர் காலங்களில் அனைத்து இடங்களிலும் கைப்பேசிகளும், தொலைப்பேசிகளும் வேலை செய்யாது. அதனால், அந்த சமயங்களில் தான் அமெச்சூர் வானொலிகளின் தேவை அகிகமானதாக இருக்கும். மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்படுவதற்கான வாய்ப்பு இங்கு தான் ஹாம்களுக்கு கிடைக்கிறது.

இது போன்ற அனைத்து தகவல்களையும்உலக அமெச்சூர் பேரிடர் தொடர்பியல் கருத்தரங்கில்” (நிகிஸிணிசி) விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரும்கூறும்அனுபவங்கள், பாடங்களாகக் பதிவு செய்யப்பட்டு, அடுத்த முறை ஏற்கனவே செய்யப்பட்ட தவறுகள் களையப்படுகின்றன. இந்த கருத்தரங்கை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில்சர்வதேச அமெச்சூர் ரேடியோ யூனியன்’ (மிகிஸிஹி) நடத்துகிறது. இதன் மூலம் அமெச்சூர் வானொலியினருக்கு பேரிடர் காலங்களில் எப்படி திறம்பட செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அடுத்த வாரமும் கேட்போம்

இயற்கை சீற்றங்களின் போது அமெச்சூர் வானொலியின் சேவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதற்குக் காரணம் வழக்கமான தொடர்பியல் சாதனங்களான தொலைப்பேசி மற்றும் கைப்பேசி சேவைகள் என அனைத்தும் செயலற்று போகும் பொழுது, இந்தஅமெச்சூர்வானொலிஎன்னும்ஹாம்வானொலியின்சேவை

அளவிடற்கரியது.