Home விளையாட்டு ஆசிய கோப்பை ஆக்கி இந்திய மகளிரணி சாம்பியன்பரபரப்பான ஆட்டத்தில் சீனா தோற்கடிப்பு

ஆசிய கோப்பை ஆக்கி இந்திய மகளிரணி சாம்பியன்பரபரப்பான ஆட்டத்தில் சீனா தோற்கடிப்பு

16
0
SHARE

ககாகிமிரா, நவ. 6&

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில், சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது.

மகளிர் ஆசியக் கோப்பை ஆக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 25&வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இந்தியா 1&0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

ஆனால், 47&வது நிமிடத்தில் சீன வீராங்கனை டியான்டியன் லுவோ பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1&1 என சமநிலைப் பெற்றது.

அதன்பின் இரு நாட்டு வீராங்கனைகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷ¨ட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷ¨ட்டில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

இதில் இரு அணிகளும் தலா 4 கோல்கள். இதனால் சடன்டெத் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இந்திய வீராங்கனை ராணி முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

சீன வீராங்கனை தனது வாய்ப்பை தவற விட்டதால் இந்தியா 5&4 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2&வது முறையாக இந்தியா ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதற்கு முன் 2004&ல் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 2018&ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here