Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சமரவீரா நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சமரவீரா நியமனம்

31
0
SHARE

கொழும்பு, நவ. 6&

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் திலன் சமரவீரா. இவர் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவரை இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) இலங்கை வருகிறார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை அணி விரைவில் இந்தியா வந்து தலா 3 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி&20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின்போது பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றுவார். 41 வயதாகும் சமரவீரா இலங்கை அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5462 ரன்கள் சேர்த்துள்ளார்.