Home விளையாட்டு மார்கரெட் சாதனையை, செரீனா முறியடிப்பார்ஸ்டெபி கிராப் நம்பிக்கை

மார்கரெட் சாதனையை, செரீனா முறியடிப்பார்ஸ்டெபி கிராப் நம்பிக்கை

22
0
SHARE

லண்டன், நவ. 6&

மார்கரெட் சாதனையை, செரீனா முறியடிப்பார் என்று ஸ்டெபி கிராப் நம்பிக்கை தெரிவித்தார்.

டென்னிஸ் உலகில் கொடிகட்டி பறந்தவர் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மேலும், 377 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தர வரிசையில் முதல் இடத்தில் இருந்தார். டென்னிஸ் வரலாற்றில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் முதல் இடத்திலும், 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று ஸ்டெஃபி கிராஃப் 2&வது இடத்திலும் இருந்தனர்.

இந்த நிலையில் ஸ்டெபி கிராப் சாதனையை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த வருடத்தின் தொடங்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றி முறியடித்தார்.

இதனால் செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் 2&வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் செரீனாவால் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடிக்க முடியும் என ஸ்டெபி கிராப் கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்டெபி கிராப் கூறுகையில் ‘‘மார்கரெட் கோர்ட் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வீராங்கனை. ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 10 முறைக்கு மேல் கைப்பற்றிய ஒரே வீராங்கனை. 1960 முதல் 1973 வரை 11 முறை ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றியுள்ளார். இவரது சாதனையை செரீனா வில்லியம்ஸால் முறியடிக்க முடியும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here