Home சிறப்புச் செய்திகள் ‘மனம்போல் மாங்கல்யம்’

‘மனம்போல் மாங்கல்யம்’

10
0
SHARE

வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சிமனம்போல்  மாங்கல்யம்’.

இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் நலன்கருதி நடத்தப்படுகிறது. உரிய வயதைக் கடந்தும் திருமணம் கைகூடாத இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் நன்மைக்காகசுயம்வர பார்வதி யாகம்நடத்தப்படுவதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களால் ஏற்படும் தடைகளை நீக்க உதவும் இந்த சுயம்வர பார்வதி யாகத்தினை தனியரு நபர் எளிதாக செய்ய இயலாது என்பதை உணர்ந்து பலபேரின் நன்மைக்காக இந்த யாகத்தினை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வேந்தர் டி.வி. முன்னின்று நடத்துகிறது.

தமிழ் மேட்ரிமோனி வேந்தர் டி.வி.யுடன் இணைந்து நடத்தும் இந்த யாகம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நடதப்படுவது இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.

இதுவரை வேலூர், திருச்சி, பவானியில் நடைபெற்ற யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தற்போது கும்பகோணம் ஆதிரும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற யாகநிகழ்வுகளும், கலந்து கொண்ட வரன்களின் விவரங்களும் நான்கு பகுதிகளாக ஒளிப்பரப்பாகிறது.

எல்லாரும் தடைகள் விலகி, திருமண பந்தத்தில் இணைந்துமனம்போல் மாங்கலயம்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியைதயாரித்துதொகுத்துவழங்குபவர்சுரேஷ்குமார்

நம் நாடு

வாரத்தின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும் கட்டிவருகிறது தந்தி டி.வி.யின் நம்நாடு. சனிக்கிழமைதோறும் மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், தலைநகரம் என்ற பகுதியில் சென்னையில் நடந்தேறிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

அதிவேக செய்தித்தொகுப்பில் அடுத்தடுத்து ஆச்சர்யங்களை குவிக்கிறார்கள். ஜூனியர் அப்துல்கலாம் என்ற பகுதி வாயிலாக பள்ளி கல்லூரி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளை தேடிப்பிடித்து தருகிறார்கள். விசில் போடு எனும் தொகுப்பு, இளைஞர்களின் எழுச்சிமிகு ஆக்கங்களை காணக்கொடுக்கிறது. விவசாயத்தின் ஆணிவேரை அலசும் இந்த நிகழ்ச்சி, பிரபலங்களின் பிறந்த நாள் பக்கங்களையும் நிரப்புகிறது. அதிரடி, ஆச்சரியங்கள், புதிய கண்டுபிடிப்புகள் என களைக்கட்டுகிறது  நம்நாடு. காணத்தவறாதீர்கள்.

பர்ஸ்ட் பிரேம்

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்குபர்ஸ்ட் பிரேம்என்னும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி  பர்ஸ்ட் பிரேம்“.  திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, ¨ட்டிங் ஸ்பாட் அனுபவங்கள்…. என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்பாகிறது. மேலும் ஹாலிவுட் திரைப்படங்களின் சுவாரசியமான காட்சிகளும் ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் கண்மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here