Home சிறப்புச் செய்திகள் ட்ரீம்வேர்ல்டு போட்டோகிராபி

ட்ரீம்வேர்ல்டு போட்டோகிராபி

12
0
SHARE

தொலைத்தொடர்பு என்பதை எளிதாக்குவதற்குதான் அலைபேசிகளும், தொலைபேசிகளும் அடையாளம் காணப்பட்டன. இன்று அதனுடைய வளர்ச்சிகள் வானத்தை தொட்டுவிட்டது, அந்த அளவிற்கு தொலைபேசி கண்டுபிடிப்புகள் தொழில் நுட்ப அடிப்படையில் வளர்ச்சிபெற்றுவிட்டன. கைகள் பட்டால்தான் இயக்க முடியும் என்ற நிலை மாறி கண்ணிமைத்தாலே போதும் உலகம் உன் கையில் நிற்கும் என்றாகிவிட்டது. ஆனால் தொலைத்தொடர்பை எளிதாக்கியவர்கள் மனிதத்தொடர்பை துண்டித்துவிட்டார்கள்.

மனங்களும், எண்ணங்களும் இணையத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. அருகில் இருக்கும் மனிதன் அழுகிறனா? சிரிக்கிறானா? என்பதை கண்டுகொள்ள கூட இங்கு யாருக்கும் நேரமில்லை, அந்த அளவிற்கு வீழ்ந்துவிட்டார்கள் தொடர்பு துண்டிக்கப் பட்ட தொலைத்தொடர்போடு. இது மட்டும்தானா என்றால் இல்லை, புகைப்படம் எடுப்பது இன்றைய தலைமுறைக்கு சுவாசிப்பது போல ஆகிவிட்டது. தூக்கம் முதல் துக்கம் வரை செல்பீ எடுத்துக்கொள்கிறார்கள், எதற்கு உதவும் இந்த நினைவலைகள், நினைத்துபார்த்தால் வெட்கம்தான் படவேண்டும். உயிரை காப்பாற்ற ஒடிய கைகள் இன்று செல்போனை  செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கின்றன. போட்டோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றமா? இல்லை ஆனால் இடம், காலம் பார்த்து எடுப்பது சிறந்தது.

இதேப்போல் நாம் கனவுகளில் கூட கண்டிருக்க முடியாத புது உலகின் போட்டோக் களை இப்போது பார்க்கலாம். வால்டிஸ்ட்னி, பெர்ரிடெய்ல், டிங்கர்பெல், போன்ற கார்ட்டூன் உலகினை கண்களில் விரிப்பது தான் இந்த புகைப்படங்களின் மிகப்பெரிய சிறப்பு. அழகான இயற்கையில் வசிக்க யாருக்குதான் ஆசை இருக்காது, ஆனால் அது இந்த உலகத்தில் எங்கிருக்கிறது என்பதை கண்டுகொள்வது தான் சிரமம்.

டிரான்சில்வேனியா இங்குதான் இந்த கார்ட்டூன் உலகம் பல கலைஞர்களுக்காக காத்திருக்கிறது, இது ருமேனியா நகரத்தில் இருக்கிறது. சுற்றுலா என்றால் இங்குதான் செல்லவேண்டும் என்பதைப் போன்ற இடம், இதுவரை யார் கண்களுக்கும் அதிகம் படாத ஓர் இடம். ஐரோப்பாவின் எஞ்சிய காடுகளும், புராணக்கதைகளும் டிரான்சில்வேனியாவில் தான் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாட்டிக்கதைகள் கூட தோற்றுப்போகும் அத்தனை அழகான இடங்கள், இன்னும் மனித வாசனை படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here