Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

10
0
SHARE

* டிசம்பரில் நடைபெறவுள்ள கேட்டலோனிய தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என முன்னாள் அதிபர் கார்லஸ் பியுக்டெமோண்ட் அழைப்பு விடுத்து உள்ளார்.

* ஜெர்மனியில் வீட்டின் பின்புறம் கிடந்த பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என எண்ணி போலீசுக்கு முதியவர் ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

* இங்கிலாந்தில் திருட வந்த இடத்தில் வெண்டிலேட்டர் ஓட்டையில் சிக்கிய திருடனை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்ட போலீசார் கைது செய்தனர்.

* இந்தியாவில் இருந்து லிபியா ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை இத்தாலியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

* தமிழகத்தில் திமு.க ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டு வாழ் தமிழர் வாரியம் அமைக்கப்படும் என சார்ஜா புத்தக வெளியிட்டு விழாவில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.. ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here