Home தமிழகம் 200 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுவதும் வெளியேற்றம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

200 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுவதும் வெளியேற்றம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

22
0
SHARE

சென்னை, நவ. 6&

200 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்யில், இந்த இரண்டு மாத பருவகாலங்களில் 79 செ.மீ. மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 5 நாட்களில், சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் 56.6 செ.மீ. மழை பொழிந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 72 சதவீத மழை இந்த 5 நாட்களில் பொழிந்திருக்கின்றது. அப்படி மழை பொழிந்திருந்தாலும், அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

315 இடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததில், தற்பொழுது, 200 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றது, மீதமுள்ள 115 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதோடு, அதிகளவில் மழைநீர் தேங்கிய பகுதிகளான, சாஸ்திரி நகர், ராஜாஜி நகர், பெரியார் நகர், வி.ஜி.பி.செல்வம் நகர், புவனேஸ்வரி நகர் போன்ற பகுதிகளில் 167

மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும், 22 சுரங்கப்பாதைகளில் முழுவதுமாக மழைநீர் வெளியேற்றப்பட்டு வாகனங்கள் தடையில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக, 81 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 20 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முகாம்களில் 2161 பேர் தங்கியிருக்கின்றனர். அத்துடன் 1,81,625 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இன்று ( நேற்று) காலையில் மட்டும் 34,959 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை, 512 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 32,236 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கே உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஏற்கனவே 400 சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடனுக்குடன் தகவல் பெறப்பட்டு, எங்கெல்லாம் மழைநீர்

தேங்கியுள்ளதோ அதனை வெளியேற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்து கொண்டிருக்கின்றது.

பொதுமக்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருத்துவ சேவைகளெல்லாம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 14,000 டன் சேறு அள்ளப்பட்டிருக்கின்றது. 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால், கனமழை பொழிந்தும்கூட, மழைநீர் விரைவாக வெளியேறியிருக்கின்றது. கடந்த இரண்டு நாட்கள் மட்டுமல்லாமல், மழை வந்தவுடன் அதிகாரிகள் ஆங்காங்கே சென்று உடனுக்குடன் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகின்றது.

கிட்டத்தட்ட 315 தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, மீதமுள்ள 115 தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார்.