Home மற்றவை ஆசிரியர் பயிற்றுனர்கள் 350 பேருக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்றுனர்கள் 350 பேருக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

8
0
SHARE

சென்னை, நவ. 6&

ஆசிரியர் பயிற்றுனர்கள் 350 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குவதற்கான பொது மாறுதல் இணையதளம் வழியாக நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிகல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், 2005&06ம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்ட மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார வள மையம், தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 1039 ஆசிரியர் பயிற்றுனர்களில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் அடிப்படையில் அரசாணை 15.11.2011 வெளியிடப்படும் முன்னரே நியமனம் செய்யப்பட்ட 350 ஆசிரியர் பயிற்றுனர்களை 2017&18ம் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ் 15, ஆங்கிலம் 45, கணிதம் 110, இயற்பியல் 60, வேதியியல் 60, தாவரவியல் 20,விலங்கியல் 20, வரலாறு 10,புவியியல் 10 என 350 பாடவாரியான எண்ணிக்கையில் நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் அளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த கலந்தாய்வினை நடத்தி முடிக்கப்படும் போது ஏற்படும் காலிப்பணியிடங்களை ஏற்கனவே மாவட்டங்களில் உள்ள 3 ஆண்டிற்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களையும் காலிப்பணியிடங்களாக எடுத்துக் கொண்டு பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்தலாம். இந்த பொதுமாறுதல் கலந்தாய்வு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் பாதிக்காத வகையில்  செயல்படுத்திட வேண்டும் என அதில் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செயல்முறையின் படி, பள்ளிக்கல்வித்துறையில் 2017&18 ம் கல்வி ஆண்டிற்கு அனைவருக்கும்  கல்வி திட்டத்தின் கீழ் மாநில,மாவட்டத் திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவட்டார மையங்களில் பணிபுரிந்து வரும் 350 ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளிக்க பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களிடம் இருந்தும் இன்று முதல் 8 ந் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை பெற வேண்டும். அந்த விண்ணப்பங்களை 8 ந் தேதி ஷ்ஷ்ஷ்.tஸீபீsமீ.நீஷீனீ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தில் முன்னுரிமை சான்று அளிக்கப்பட்டால் அவை சரிபார்க்கப்பட வேண்டும். 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குவதற்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். 11 ந் தேதி மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் ஆசிரியர் பயிற்றுனர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும். 12 ந் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர் பயிற்றுனர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here