Home மற்றவை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 115 பல்நோக்கு பாதுகாப்பு மையம்; 4,399 முதல் நிலை மீட்புக்குழுதமிழக...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 115 பல்நோக்கு பாதுகாப்பு மையம்; 4,399 முதல் நிலை மீட்புக்குழுதமிழக அரசு தகவல்

8
0
SHARE

சென்னை, நவ. 5&

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 4,399 முதல் நிலை மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 8,9 மற்றும் 24 ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த 2ம் தேதி மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறை அரசுச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 4399 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 578 மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், 892 அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், 1206 மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் மற்றும் 1723 குறைவான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும்.

589 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல், மீட்பு மற்றும் வெளியேற்றம், நிவாரணம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து துறைகளைச் சார்ந்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. 23,325 முதல் நிலை மீட்பாளர்களைக் கொண்ட 4,399 முதல் நிலை மீட்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவில் 6,740 பெண்கள் உள்ளடங்குவர்.வெள்ளம், வறட்சி  போன்ற ஆபத்தினை குறைக்கும் நோக்கத்துடன், அணைகள், நீர்நிலைகள் மற்றும் ஆறுகளை தூர்வார தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு, மாவட்ட நிர்வாகங்களின்மூலம், விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக தங்களது நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் 1.6 டிஎம்சி நீர்சேமிப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 33,612 நீர்நிலைகளில், 5.06 கோடி கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. 22,538 நீர்நிலைகள், 12,070 கி.மீ. நீளம் கொண்ட ஆற்றுப்பாதைகள் தூர்வாரப்பட்டும், நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட 7,030 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் உள்ளன. 9,627 பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 1,37,826 சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

சமூகவிரோதிகளால் பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் என கருதப்படும் அணைகள் கண்டறியப்பட்டு, அவைகளை பாதுகாத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது இரண்டு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை இருப்பில் வைத்திட தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஜென்செட் போன்ற சாதனங்களை, முதல் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் விநியோகிப்பதற்கு ஏதுவாக போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தேவையான மருந்துகள் தயார்நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் முன்கணிப்புப்படி, கட்டுமரம்,படகுகள் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார்நிலையில் வைத்துக் கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காக, கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் மூலமாக ரூ.345 கோடி செலவில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதைத்தவிர தற்காலிக நிவாரண முகாம்களும் கண்டறியப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here