Home அரசியல் கருத்து வேறுபாடு தான் உள்ளது;பிளவு இல்லை தம்பிதுரை பேட்டி

கருத்து வேறுபாடு தான் உள்ளது;பிளவு இல்லை தம்பிதுரை பேட்டி

96
0
SHARE

திருவாரூர், ஆக. 20 & அ.தி.மு.கவில் கருத்து வேறுபாடுதான் உள்ளது. பிளவு இல்லை என்று தம்பிதுரை கூறினார் திருவாரூரில் தம்பித்துரை நிறுபர்களிடம் கூறியதாவது:&

அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. ஒரு கட்சியில் 2&ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றால் தான் பிளவு ஆகும். நாங்கள் அப்படி அல்ல. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதனை பேசி தீர்த்து கொள்வோம்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இதனை நாங்கள் உறுதி மொழியாக ஏற்கிறோம். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை.

போயஸ் கார்டன் இல்லத்தை மறைந்த முதல்&அமைச்சர் ஜெயலலிதா கஷ்டப்பட்டு கட்டினார். அதனை நினைவு இல்லமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் எண்ணமும் அது தான்.

எனவே ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக அரசு அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதன் உண்மை நிலையை அறியதான் நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.