Home சிறப்புச் செய்திகள் கமலுக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்…! தாத்தா,

கமலுக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்…! தாத்தா,

40
0
SHARE

இளைஞர் பட்டாளத்துடன் இரவு முழுவதும் கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அதிகாரிகள் சர்..சர்..புர்..புர்ன்னுக்கு காரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ மட்டும் எடுத்து சென்றார்கள் என்று செல்போனில் தாத்தா புலம்பிக் கொண்டு இருந்தார்..

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, .தி.மு.. தலைமை அலுவலகம் உள்ளிட்ட வி..பி. இல்லங்களிலும், அலுவலகங்களிலும் மழை நீர் வெள்ளம் புகுந்துவிட்டது என்று செய்தி போடுகிறார்கள்.. ஆனால் குடிசைகள் மிதந்து, கைக்குழந்தைகளுடன் அலையும் மக்களைப்பற்றி செய்தியை சொல்லவில்லை ஏன்…? என்று இளைஞர்கள் தாத்தாவிடம் கேட்க, தாத்தா சிரித்துக் கொண்டே பதில் சொல்லவில்லை.

வட கிழக்கு பருவமழையால் கிடைத்த மழைநீர், கூவம், அடையாறு ஆறுகள் மூலம், கடந்த சில  தினங்களில் மட்டும், 3.75 டி.எம்.சி., அளவிற்கு, கடலில் கலந்து வீணாகியுள்ளது. அதே நேரத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 20 சதவீதம் கூட தண்ணீர் நிரம்பவில்லை. போதிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு செய்யாததால், ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில், கடந்த, 26&ம் தேதி, வட கிழக்கு பருவமழை துவங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், 29&ம் தேதி இரவு முதல், தொடர் மழை பெய்து வருகிறது. இதில், சிறிய நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகின்றன.

குடியிருப்புக்களில் போதிய மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், மழைநீர், வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் மூலம், கூவம், அடையாறு ஆறுகள் வழியாக, கடலில் கலந்து வருகின்றன.இந்த வகையில், கடந்த இரண்டு தினங்களாக, சென்னையின்  முக்கிய நீர்வழிதடங்களான கூவத்தில், வினாடிக்கு, 6,500 கன அடியும், அடையாறு ஆற்றில், 14 ஆயிரம் கன அடியும், பக்கிங்ஹாம் கால்வாயில், 1,400 கன அடி நீரும், கடலுக்கு சென்றது. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் வழியாக, வினாடிக்கு, 21 ஆயிரத்து, 900 கன அடி நீர் கடலுக்கு செல்கிறது.

* ஒரு மணி நேரத்திற்கு, 3,600 வினாடிகள். இரண்டு நாட்கள், அதாவது, 48 மணி நேரத்திற்கு, ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 800 வினாடிகள். இந்த காலகட்டத்தில், கடலை நோக்கி பாய்ந்த நீரின் அளவு, 378 கோடியே, 43 லட்சத்து, 20 ஆயிரம் கன அடியாகும்.அதாவது, 3,784 மில்லியன் கன அடி நீர் கடலில் கலந்து உள்ளது இதைப்பற்றியெல்லாம் அதிகாரிகளும் கவலைப்படவில்லை, அமைச்சர்களும் கவலைப்படவில்லை, என்ன அரசாங்கமோ என்று தாத்தா ஆவேசமாக திட்டித் தீர்த்தார்.. இளைஞர்களுக்கு என்ன செய்வது என்று ஒண்ணும் புரியாமல் தவித்தார்கள் இந்து தீவிரவாதம் குறித்து, கமல் கூறிய கருத்து, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா...வினர் கொதித்து, கமலுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள்..

தமிழகத்தில், இந்துத்துவ சக்திகள், மெதுவாக ஊடுருவுவது பற்றிய கேள்விக்கு, கமல் கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து, ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இது தொடர்பாக, சினிமா கலைஞர்களையும், ஜாதி வாரியாக பிரித்து, பட்டியலிடும் வேலையையும், அவர்கள் துவக்கி விட்டனர்.இதுவரை, வாதங்களால் செய்த விஷயங்கள், முடியாமல் போகவே, வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர்.

எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள்என்ற சவாலை, அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது.வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை விட, வலிமையே வெல்லும் என்ற நம்பிக்கை, காட்டுமிராண்டிகள் ஆக்கி விடும் என்று டிவிட்டர் பக்கம் மூலம் பதில் அளித்துள்ளார்.. பா...வும் கமலுக்கு எதிராக முதலில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. அடுத்து கமல் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு நடத்தும் அவ்வளவுதான்.. என்ற தாத்தா சொன்னவுடன், இளைஞர்கள் அதிர்ச்சியானார்கள்.