Home தமிழகம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு இடைத்தரகர்களை நம்பாதீர் பெற்றோர்களுக்கு பாரிவேந்தர் வேண்டுகோள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு இடைத்தரகர்களை நம்பாதீர் பெற்றோர்களுக்கு பாரிவேந்தர் வேண்டுகோள்

37
0
SHARE

சென்னை, நவ. 4& எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு இடைத்தரகர்களை நம்பாமல் பல்கலைக் கழகத்தின் அலுவலகத்தில் நேரில் விசாரித்து சேர்ந்துக்கொள்ள வேண்டும் என பாரிவேந்தர் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய ஜனநாயக கட்சியில் என்னுடன் இருந்த ஒருவர் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கட்சியினரிடமும், பிறரிடமும் ரூ.85 கோடி வாங்க முடிந்தது என்றால் அவருக்கு அந்தளவிற்கு ஏமாற்றும் திறமை இருந்துள்ளது. சிலர் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். என்னிடம் உள்ள பலவீனமான எல்லோரையும் நம்புவதை பயன்படுத்தி இதனை செய்துள்ளார்.

எனக்கு பெற்றோர் வைத்த பெயர் பச்சமுத்து என்பதை பாரிவேந்தர் என மாற்றினேன்.  2014ம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் பச்சமுத்து பெயரில் மேலும் பல வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினர். இதனால் தனது பெயரை பாரிவேந்தர் என கட்சியினர் வைத்தனர். அதனை அரசிதழில் முறைப்படி வெளியிட்டு பதிவும் செய்துள்ளேன்.

மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்ற அந்த நபர் என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது. தனது பெயரை பாரிவேந்தர் என மாற்றம் செய்த போது அவர் வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். அப்போதே தான் அந்த பெயரை மாற்ற வேண்டும் என கூறினேன். அதற்கு  அவர் கால அவகாசம் கேட்டார்.

மக்களையும், மாவட்ட தலைவர்களையும் நம்ப வைத்து மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக பணம் பெற்றுள்ளார். எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரி திருச்சியில் 2014&15,2015&16 ஆகிய 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. 2014 &15 ம் கல்வியாண்டில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அரசு ஒதுக்கீட்டின் மூலமே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2 ஆண்டுகளிலும் அரசின் மூலமே மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையிலும், சிலரிடம் பணத்தை பெற்றுள்ளார். மாணவர்களிடம் ரூ.85 கோடி பெற்று சொந்த செலவிற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

2016ம் ஆண்டு  மே மாதம் 26 ந் தேதி சுயமாக ஒருகடித்தை எழுதி வைத்து விட்டு காசிக்கு சென்று ஜூவசமாதி அடைவதாக கூறி  மறைந்து போனர். அதன் பின்னர் 6 மாதம் தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து கொண்டு வந்தனர். இந்த வழக்கிலும் அவர், அவரது நண்பர்கள் 2 பேர், 4 வது குற்றவாளியாக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கிலும் எனது பெயர் இல்லை. இந்நிலையில் எனது மகன்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 25.8.2016 அன்று நானே விசாரணை அதிகாரியை தொடர்பு கொண்டு என்னை விசாரிக்க வேண்டும் என்றால் நானும் வருகிறேன் என கூறி சென்றேன். அன்று மாலை 7 மணி வரையில் தன்னிடம் விசாரணை செய்த அந்த அதிகாரி, அதன் பின்னர் என்னை கைது செய்து 14 நாட்கள் புழல் சிறையில் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து எனது மகன்கள் எஸ்.ஆர்.எம். அறக்கட்டளையில் இருந்து ரூ.85 கோடி பிணையத்தொகையாக செலுத்தி என்னை ஜாமினில் வெளியே அழைத்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்பதை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கூறினோம். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்று இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என மனு செய்தோம். அதன் மீதான தீர்ப்பில், பெற்றோர்கள் வழக்கினை வாபஸ் பெற வேண்டும். பெற்றோர்களுக்கு அவர்களின் பணத்தை திருப்பி தர வேண்டும். வழக்கில் இருந்து பாரிவேந்தர் பெயரை நீக்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை மட்டுமே விடுவித்துள்ளனர். வழக்கில் உள்ள மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பணத்தை செலுத்தியதற்கு முக்கிய காரணமே இந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலதத்திலும் மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கு பல்கலை கழகத்தினை நடத்துவதில் எந்தவித தடையும் வரக் கூடாது என்பதற்காகத்தான் செலுத்தி உள்ளோம்.

மேலும் இந்த பணம் எஸ்.ஆர்.எம்.அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பதால், அந்த நபரிடம் இருந்து இந்த பணத்தையோ அல்லது சொத்துகளையோ பறிமுதல் செய்யும் போது அந்த நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என வழக்கும் தொடர்ந்துள்ளோம்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தான் சேர்க்கப்படுகின்றனர். எனவே பெற்றோர்கள் யாரிடமும் பணம் அளித்து ஏமாந்து விட வேண்டாம். மேலும் மாணவர்கள் சேர்க்கை குறித்து நிர்வாகம், அலுவலகம், பல்கலைக் கழகத்தின் இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் நேரில் வந்து விபரங்களை பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். தனது மீது வீண் பழி துடைக்கப்பட்டதால், தொடர்ந்து மக்கள் பணியிலும், கட்சிப்பணியிலும் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்தார்.