Home அரசியல் அரசின் அலட்ச்சியத்தால் சென்னை தத்தளிக்கிறது வைகோ குற்றச்சாட்டு

அரசின் அலட்ச்சியத்தால் சென்னை தத்தளிக்கிறது வைகோ குற்றச்சாட்டு

19
0
SHARE

சென்னை, நவ. 4& தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் காட்டிய அலட்சியத்தால் தான் சென்னை மாநகரம் நான்கு நாள் மழைக்கே தாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றட்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெய்து வரும் கன மழையால் மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் 2015ம் ஆண்டு போன்ற வெள்ள சேதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.சென்னையில் ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளதால்,பல இடங்களில் ஏரி உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது.

சென்னை கொடுங்கையூர் மின் கம்பியில் சிக்கி இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு மின்வாரியம் மட்டுமல்ல, தமிழக அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்ஏனெனில் சென்னை முழுவதிலும் மின் விநியோகத்திற்காக டிஸ்டிரிபூஷன் பேனல் எனப்படும் பில்லர் பெட்டிகள் சாலை ஓரங்களில் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டு இருக்கின்றன

மின் வாரியத்தில் கீழ்நிலை ஊழியர்கள் பற்றாக்குறை,உதிரி பாகங்கள் இல்லாமை போன்வற்றால்தான் மின் வாரியப் பராமரிப்புப் பணிகள் சரிவர நடக்கவில்லை. மேலும் மின்வாரியத்தில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மின் வாரிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இவற்றையெல்லாம் கவனிக்கவோ, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவோ நேரம் இல்லைமாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எனும் பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார்களே தவிர,மாவட்ட வாரியாக மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவில்லை என்பது கண்டனத்துக்குரியது.விவசாயிகளை நீர் நிலைகளில் மண் எடுத்துக்கொள்ள அனுமதித்ததால்தான் ஓரளவிற்கு தூர் வாரும் பணிகள் நடந்துள்ளன.

ஆனால் இதற்காக அரசு சார்பில் 450 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறுவது எந்த அடிப்படையில் என்று முதல்வர்தான் விளக்கம் தர வேண்டும்சென்னை மட்டுமல்லாமல், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வெள்ளத் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here