Home அரசியல் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் வைகோ அறிக்கை

வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் வைகோ அறிக்கை

19
0
SHARE

 சென்னை, நவ. 4& வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதியை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்திள்ளார்.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

தமிழகத்தின் நீர் ஆதாரமாக திகழும் முக்கிய ஆறுகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டு ஆற்று வளம் அடியோடு அழிக்கப்பட்டு விட்டனதமிழகத்தின் ஆறுகள் அனைத்தும் மணல் மாபியாக்களின் பிடியில் சென்று விட்டது. அதிகார வர்கத்தினர் ஆளும் கட்சியின் கூட்டணியோடு மணல் கொள்ளையை தங்கு தடையின்றி நடத்துவதால் ஆறுகள் தற்போது வறண்டு கிடக்கின்றன.

கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மணல் எடுக்க தடை உள்ளதால் தமிழக ஆறுகளில் எடுக்கப்படும் மணல் அந்த மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறதுநாள்தோறும் 25 ஆயிரம் லாரிகள் மணல் விற்பனை செய்வதாக கணக்கு காட்டி விட்டு, 90 ஆயிரம் லாரிகளில் மணல் எடுக்கப்பட்டதுஇதனால்மணல்தட்டுப்பாடுஏற்பட்டுள்ளதால்பெரும்பாதிப்புஏற்படுகிறது.

மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று, ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 53.334 மெட்ரிக் கடன் மணலை இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் நிறுவனம் விற்பனை செய்ய தமிழக அரசின் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்இதனால் அக்டோபர் 21&ம் தேதி முதல் துறைமுகத்தில் மணல் தங்கி கிடக்கிறது.

தமிழகத்தில் மணல் கொள்ளையால் ஆறுகள் முற்றிலும் சீரழிந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். மணல் மாபியர்களின் பிடியில் சிக்கியிருக்கும் மணல் விற்பனையை பரவலாக்குவதற்கு தேவையான விதிமுறைகளை வகுத்து இறக்குமதி மணல் விற்பனையை ஒழுங்கு படுத்தவேண்டும்.

தமிழ்நாட்டில் ஆற்று மணல் சுரண்டலை தடுத்து கட்டுமான பணிகளுக்கான மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு வழி ஏற்படும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here