Home தமிழகம் முன் எச்சரிக்கையாக மின்தடையா? வயர்கள் அறுந்ததால் மின் தடையா? மக்களை குழப்பும் அமைச்சர்கள்

முன் எச்சரிக்கையாக மின்தடையா? வயர்கள் அறுந்ததால் மின் தடையா? மக்களை குழப்பும் அமைச்சர்கள்

6
0
SHARE

சென்னை, நவ. 4& சென்னையில், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டுள்ளது. கும்மிருட்டில் தவித்து வரும் மக்களுக்கு, மின் தடை எதற்கு என விளக்கம் தந்து, இரண்டு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை  கூறியதால், பொதுமக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. விட்டு விட்டு பெய்யும் கன மழைக்கே, சென்னை தத்தளிக்கின்றது. பல்வேறு இடங்கள், வெள்ள நீரால் சூழ்ந்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. சென்னை, கொடுங்கையூர் பகுதில், தேங்கிய மழை நீரில், மின்சாரம் பாய்ந்து, யுவஸ்ரீ, பாவனா ஆகியோர் இறந்தனர்.

மழை, வெள்ளம் காரணமாக , பல்வேறு இடங்களில்,  மின் தடை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில், மழை விட்டும், அங்கு, மின் தடை அகல வில்லை. இந்த மின் தடை விரைவில் சீரடையும் என  மின் துறை அமைச்சர் தங்கமணி  தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில், மக்களுக்கு, அரசு கொடுக்கும் தகவல் , சரியானதாக இருக்க வேண்டும் . இதைத்தான் , மக்களும் எதிர்பார்க்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அவர் ,ஒருவர் சொல்வது தான், அதை தான் மக்கள் நம்பினர்.

அவர், சொல்வது போல் தான், மழைக்காலங்களில், போர்க்கால நடவடிக்கையை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் எடுப்பர். ஜெயலலிதாவின் மாற்று கருத்தாக, யாரும் பேட்டியும் கொடுக்க மாட்டார்கள்,  ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை.

ஒருஅமைச்சர்ஒன்றுபேசினால், அவர், என்ன பேசினார் என்பது தெரியாமல், மற்றொரு அமைச்சர் அதே கருத்தை, அல்லது தகவலை மாற்றி கூறுவார். இதில் எந்த அமைச்சர் சொல்வதை நம்புவது என மக்கள் குழம்பும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது, .தி.மு..வில்  இந்த குழப்பம் அதிகமாகவே உள்ளது என்கின்றனர் பொதுமக்கள், மழைக்காலம், மின் தடை ஏற்படுவது அல்லது, அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க , மின் துண்டிப்பு , இவையெல்லாம் வழக்கமான ஒன்றாகும். ஆனால், மழை விட்ட இடங்களில், உடனடியாக, மின் தடையை  நீக்குவதும், பழுதை சரி செய்வதும், ஆட்சியாளர்கள் வேலை.

தற்போது, மழையின் காரணமாக, பல்வேறு இடங்களில், மின் தடை உள்ளது. இது குறித்து, மின் துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் கொடுக்கிறார். அதில், மழைக்காலம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சார இணைப்புகளை அணைத்து வைத்துள்ளோம் என்று அறிவித்தார்.

இதேதகவலை, அமைச்சர் உதயகுமார் கூறும்போது; மழையில், மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

அதை, பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. அதனால், தான் மின் தடை என தெரிவித்துள்ளார். இந்த இரண்டு அமைச்சர்கள் மாறுபட்ட தகவலை கூறியுள்ளதால், மழையிலும் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த குழப்பத்தை, அமைச்சர்கள் தான் தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here