Home அரசியல் ஓ.பி.எஸ். முடிவை ஏற்போம்: ‘அ.தி.மு.க. அணிகள் இணைய நான் தடை போடவில்லை’ ...

ஓ.பி.எஸ். முடிவை ஏற்போம்: ‘அ.தி.மு.க. அணிகள் இணைய நான் தடை போடவில்லை’ கே.பி.முனுசாமி விளக்கம்

32
0
SHARE

சென்னை, ஆக. 20& ஒ.பி.எஸ். முடிவை ஏற்போம். அ.தி.மு.க. அணிகள் இணைய நான் தடைபோடவில்லை என்று கே.பி.முனுசாமி கூறினார்.

அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி நீடிப்பதால் இணைப்பு மேலும் தாமதமாகி வாருகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் ஒ.பன்னீர்செல்வம் அணியில் 4 பேர் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் முன்னள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் ஒருவர்.

ஆனால் இதை கே.பி.முனுசாமி மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:&

ஒ.பி.எஸ். தலைமையில் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். தொண்டர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கிறேன். ஒ.பன்னீர் செல்வம் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக நாங்கள் கட்டுப்படுவோம்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கி நான் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை.

எங்களது முக்கியமான கோரிக்கை சசிகால குடும்பத்தை முற்றிலும் வெளியேற்றுவதுதான். தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை.

தர்மயுத்ததின் மூலக் கருவே சசிகலா குடும்பத்தை முழுமையாக வெளியேற்றுவதுதான் சசிகலா நீக்கப்படும் வரை இணைப்புக்கான சாத்தியம் குறித்து என்னால் எதுவும் கூற முடியது.

இவ்வாறு கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.