Home தலையங்கம் வாழ்நாள் தடை விதித்தால் மக்களுக்கு நன்மையே…!

வாழ்நாள் தடை விதித்தால் மக்களுக்கு நன்மையே…!

12
0
SHARE

நாம் வசிப்பது ஜனநாயக நாடு. மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்புதான் அரசு. நம் நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அங்கம் வகிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகவோ, எம்.எல்..வாகவோ, எம்.பி.யாகவோ வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்தியனாக இருந்தால் மட்டும் போதும். படிப்போ, வேறு எந்த குவாலிபிகேஷனோ தேவையில்லை. அப்படிதான் பலரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள்.

இதில் பல எம்.பி., எம்.எல்.., கவுன்சிலர்களுக்கு தன் கடமை என்னவென்றே தெரியாது. பதவியை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்பது மட்டும் நன்றாக தெரியும். இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மிரட்டல், ஆள் கடத்தல் என்ற பின்னணி கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நல்லது செய்வார்கள் என்று மக்கள் வாக்களிப்பது கிடையாது. பயத்திலேயே வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிடுகின்றனர். ஆனால் இவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மைகளை செய்வார்களா?

தட்டிக்கேட்டால், அந்த நபருக்கு கொலை மிரட்டல் உடனடியாக வந்து சேரும். இதுபோன்று பலப்பல. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் சிலருக்கு கொலை, கொலை மிரட்டல், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தவர்களாகவே இருக்கின்றனர். காவல்நிலையத்தில் வழக்குகளும் இருக்கின்றன. சிறைவாசமும் அனுபவித்திருப்பார்கள். இதுபோன்ற ஒருவரால் மக்கள் பணியாற்ற முடியுமா என்பது தான் இப்போது மக்களின் கேள்வியாக உள்ளது.

அரசியல்வாதிகள், தங்கள் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்கிற விதி (2004ல்) அமலுக்கு வந்த பிறகுதான், கிரிமினல் அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற யதார்த்த நிலை பளிச்சிட்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 462. இது, 2009ல் 1,158 வேட்பாளர்களாகவும் 2014ல் 1,404 வேட்பாளர்களாகளாகவும் உயர்ந்தது.

கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களால், ‘6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாதுஎன்பது தேர்தல் ஆணைய விதி. அதாவது, தண்டனைக் காலம் முடிந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியென்றால், இரண்டு பொதுத் தேர்தல்களில் அவர்களால் நிற்க முடியாது.

குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்என்று பா...வின் அஸ்வினி உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்தது. குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கலாம்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியுள்ளோம். குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தால்தான், அரசியலிலிருந்து குற்றச்செயல்களைக் குறைக்க முடியும்என்று விளக்கமளித்தது. குற்றப்பின்னணி உடைய ஒருவரை தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை விதித்தால் குற்றங்களை செய்யாத நன்கு படித்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார். அவ்வாறு வருபவர்கள் மக்கள் மனதை பிரதிபலிப்பவராக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அரசும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இணைந்து இந்த நல்ல முடிவை உடனடியாக எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மெல்ல மெல்ல குற்றப்பின்னணி உடையவர்கள் அரசியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்படுவார்கள். என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here