Home தமிழகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் துவக்கம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் துவக்கம்

38
0
SHARE

திருவள்ளூர், ஆக. 20&  திருவள்ளூரில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு விளையாட்டுத்துறையில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார். மேலும் பேசுகையில், தற்போது நடைபெறும்   பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்களுக்கான தடகளம், பெண்களுக்கான தடகளம், இருபாலாருக்குமான கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, வளைகோல்பந்து (ஹாக்கி), கையுந்து பந்து, நீச்சல் போட்டிகளும் இடம் பெறுகிறது என்றும் தெரிவித்தார்.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 2.9.2017 அன்று பொன்னேரி வட்டம், பஞ்செட்டியில் நடைபெறும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கேடயம் மற்றும் இதர பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் பேசினார்.

முன்னதாக பள்ளி மாணவர்களின் பேரணியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ச.சா.குமார்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செ.அருணா, திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ, திருவள்ளுர் வட்டாட்சியர் கார்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.