Home இந்தியா “பஞ்சாபில் இந்திரா காந்தியின் சிலைக்கு அனுமதி இல்லை”சீக்கிய அமைப்புகள் முடிவு

“பஞ்சாபில் இந்திரா காந்தியின் சிலைக்கு அனுமதி இல்லை”சீக்கிய அமைப்புகள் முடிவு

17
0
SHARE

அமிர்தசரஸ், நவ. 2&

அமிர்தசரஸில்  நடைபெற்ற பியாந்த் சிங்கின் நினைவுநாள் கூட்டத்தில் தங்க கோவிலின் தலைமை சுரபிஎக்காரணத்தைக் கொண்டும் இந்திரா காந்திக்கு பஞ்சாபில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாதுஎன்று உறுதி கூறியுள்ளார்.

1984ல் தங்க கோவிலில் நடைபெற்ற சீக்கியர்களின் படுகொலைக்கு இந்திரா காந்தி தான் காரணம் என்று இன்றும் பஞ்சாபில் வாழும் சீக்கியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பழி வாங்கும் முயற்சியாகவேஆப்ரேஷன் புளூ ஸ்டார்என்கிற பெயரில், அக்டோபர் 31, 1984ல் அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தியை அவருடைய பாதுகாவலரான பியாந்த் சிங்கே சுட்டு கொன்றனர்.

அப்போது இந்திரா காந்தியின் மற்ற மெய் காவலர்கள் அவரை திருப்பி சுட்டதில் அந்த இடத்திலேயே அவரும் உயிர் இழந்தார்.நேற்று நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட அதே சமயத்தில் பியாந்த் சிங்கிற்கும் சில சீக்கிய அமைப்புகள் நினைவுநாள் அனுசரித்தன.

அதில் பேசிய தங்க கோவிலின் தலைமை சுரபியான கியானி ஜாக்டர் சிங், சீக்கியர்களின் படுகொலைக்கு தாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை இந்திரா காந்திக்கு பஞ்சாபில் சிலை நிருவ அனுமதிக்கக் கூடாது என்றார்.

முன்னாள் அமைச்சரான ஹீரா சிங்கும்பஞ்சாபில் எந்த பொது இடத்திலும் இந்திரா காந்திக்கு சிலை வைக்க விடமாட்டோம்என்று கூறியுள்ளார். இந்நிலையில் பஞ்சாபின் லுதியானவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில அலுவலகத்தில் நேற்று இந்திரா காந்தியின் சிலை அமைக்கப்பட இருந்த நிகழ்வை காங்கிரஸ் கட்சியினர் தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here