Home மற்றவை திருவள்ளூர் மாவட்டத்தில் 200 வெள்ள அபாயம் ஏற்படும் இடங்கள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 200 வெள்ள அபாயம் ஏற்படும் இடங்கள்: கலெக்டர் தகவல்

6
0
SHARE

திருவள்ளூர், நவ. 2&

திருவள்ளூர் மாவட்டத்தில் 200 இடங்கள் வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:&

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் மிகவும் அதிக அளவில் பாதிப்புக்கு உட்படும் 18 இடங்களும் மற்றும் அதிக அளவில் பாதிப்புக்கு உட்படும் 74 இடங்களும், மிதமான பாதிப்புக்கு உட்படும் 64 இடங்களும், குறைந்த அளவில் பாதிப்புக்கு உட்படும் 44 இடங்களும் ஆக மொத்தம் 200 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளைஉரியமுறையில்கண்காணித்துபாதிப்புக்குள்ளாகும்பொதுமக்கள்மற்றும்

பகுதிகளுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்குவதற்கு துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய 60 மண்டல குழுக்கள் மற்றும் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் 38 மாற்று மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் சமயங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 5 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், 4 புயல் பாதுகாப்பு மையங்களும், 178 தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பெரு மழையினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீட்பு பணிக்காக நன்கு நீச்சல் தெரிந்த 145 நபர்களும் மற்றும் 11 படகுகளும் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பெருமழை தொடர்பாக பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வருவாய் கோட்ட அளவில், திருவள்ளூர் 044&27660248, 9940318661, பொன்னேரி 044&27974073, 8608984066, திருத்தணி 044&27885877, 9994123566 மற்றும் அம்பத்தூர் 044&26541221, 9444555950 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், திருவள்ளூர் மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 044&27664177, 27666746 ஆகியவைகளும் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை போன்ற துறைகளில் மணல் மூட்டைகள் 1,38,271, சவுக்கு குச்சி 6,226, பொக்லைன் இயந்திரங்கள் 12, ஜே.சி.பி இயந்திரங்கள் 207, மரம் அறுக்கும் இயந்திரம் 108, நீர் வெளியேற்றும் மோட்டார்கள் 141, ஜெனரேட்டர்கள் 164, குடிநீர் லாரிகள் 20, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் 2,401, பிளீச்சிங் பவுடர் 121 மெட்ரிக் டன், குளோரின் மாத்திரைகள் 4.66 மெட்ரிக் டன் அளவில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என்று  மாவட்ட கலெக்டர்  .சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.