Home சுடச்சுட 4,300 ஆசிரியர்கள் சஸ்பெண்ட், அரசு ஆலோசனை

4,300 ஆசிரியர்கள் சஸ்பெண்ட், அரசு ஆலோசனை

16
0
SHARE

இளைஞர்கள் காத்திருந்தார்கள்.தாத்தா வீட்டில் இல்லை.. சிறிது நேரத்தில் முழங்கால் அளவுக்கு டிராயர் போட்டுக் கொண்டு இரு சக்கரவாகனத்தில் வந்தார். இளைஞர்கள் என்ன தாத்தா வயது 30 என்று நினைப்பா. ஆமாம். காலையிலே மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளை போட்டோ எடுத்து வந்தேன். போட்டோவை பார்த்தவுடன் அமெரிக்கா, லண்டனுக்கு இணையாக சென்னையும் இருக்கும் என்பதில் பெருமையாக இருக்கிறது.. இன்னொரு மழை பெய்தால் சென்னையை தேட வேண்டியிருக்கும்

தி.மு.. தலைவர் கருணாநிதியை, பா..க நிறுவனம் டாக்டர் ராமதாசு கோபாலபுரம் வீட்டில் சந்தித்தார். உடல் நலம் விசாரித்தார். 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தி.மு.க மீது கோபத்தில் இருந்த டாக்டர் ராமதாசு, கலைஞர் சந்திப்பு அரசியல் நாகரீகத்துக்கு எடுத்துக்காட்டு என்று தாத்தா முணு முணுத்தார்.அடுத்த செய்திஞ்தாத்தா.

அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அரசின் அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, ‘சஸ்பெண்ட், டிஸ்மிஸ்உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

  இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி பேரம் பேசி வருகின்றார்கள்.தாத்தா ஆசிரியர்கள் திருந்தவே மாட்டார்களா.

லஞ்ச வழக்கில் சிக்கிய, சேலம் மாவட்ட தாட்கோ மேலாளர், ‘சஸ்பெண்ட்செய்யப் பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் மதியழகன், 3வி.சி., கட்சி ஆத்தூர் நகர செயலர். இவரிடம், மின் இணைப்பு மானியத்துக்கு, ரூ2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, 26ம் தேதி, சேலம் மாவட்ட தாட்கோ மேலாளர் கருணாநிதி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, தாட்கோ மேலாண் இயக்குனர் சுப்பையா, கருணாநிதியை சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டார். ஆனால் உண்மையில் கருணாநிதி லஞ்சம் வாங்கவில்லையாம்.என்ற வாட்ச் அப் செய்தியை படித்துவிட்டு..கருத்து எதுவும் சொல்லமல் அடுத்த செய்திக்கு சென்றார் தாத்தா.

   ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், மக்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது. புதிய மின் இணைப்பு பெற, மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கு நிர்ணயித்ததை விட, கூடுதலாக பணம் தருவோருக்கு மட்டுமே, மின் இணைப்பு தரப்படுகிறது. இதையடுத்து, மின் வினியோக சாதனங்களில் இருந்து, 100 அடிக்குள் உள்ள வீடு, கடைகளுக்கு, ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, மின் வாரியம், ஜூலையில் துவக்கியது.

தரைக்குஅடியில், ‘கேபிள்பதித்து, மின் சப்ளை வழங்க, 48 மணி நேரம் எடுத்து கொள்ளப்படும்.  ஆனால், மின் இணைப்பு வழங்குவதை தாமதம் செய்ய, பொறியாளர்கள், மக்களை நூதன முறையில் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஒரே நாளில் மின் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை இணையதளம் அல்லது நேரில் பெறும் விண்ணப்பங்களை, ஒரே நாளில் அல்லது பணிக்கு ஏற்ப, 48 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கலாம்.  ஆனால் காலை 10.30மணிக்கு தான் அதிகாரிகள்  வருகிறார்கள். பிறகு எப்படி விண்ணப்பம் கொடுக்க முடியும்.  காலை, 10:00 மணிக்கு மேல் பெறும் விண்ணப்பம், மறுநாள் எடுத்து கொள்ளப்படும்.

இதையடுத்து, காலையில் விண்ணப்பம் தருவோரை, ‘மாலை வரவும்என, பிரிவு அலுவலக ஊழியர்கள், பொறியாளர்கள் கூறுகின்றனர். மக்களை அலைக்கழிப்பதுடன், விண்ணப்பத்தை தாமதமாக பெறுவது போல் பதிவு செய்து, மின் இணைப்பு தருவதையும் வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர்.

வைட்டமீன் () கொடுத்தால் மதியம் 2மணிக்கு விண்ணப்பம் கொடுத்தால் கூட அன்றே இணைப்பு கிடைக்கிறது, தாத்தா சொன்னவுடன், இளைஞர்கள் லஞ்சத்தை ஒழிக்க முடியாதா தாத்தா/ஏன் முடியாது? உங்களை போன்ற இளைஞர்கள் தான் லஞ்சத்தை ஒழிக்க முயற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் என்று தாத்தா கூறினார்.. இளைஞர்கள்.. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.