Home சுடச்சுட டெல்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 4&ம் தேதி தமிழகம் பங்கேற்பு

டெல்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 4&ம் தேதி தமிழகம் பங்கேற்பு

9
0
SHARE

சென்னை, நவ. 2&

டெல்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 4 ம் தேதி தமிழகம் பங்குபெறுகிறது.இதனை பிரதமர் மோடி துவக்கிவைக்கிறார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. மத்திய அரசின்  உணவுபதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் உலக உணவு இந்தியா 2017 என்னும்  சர்வதேச நிகழ்ச்சி புதுடில்லியில் 03.11.2017 முதல் 05.11.2017 வரை நடைபெறவுள்ளது.  இதன்  மூலம்  இந்திய உணவு பதப்படுத்தும் துறைகளில் முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், இந்தியா உணவுப் பொருளாதாரத்திற்கு நுழைவாயிலாகவும், வெளிப்படுத்தவும், இணைக்கவும், ஒத்துழைக்கவும் வாய்ப்பு அளிக்கிறது.

முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், உணவுபதப்படுத்துவோர், கொள்கை வகுப்பாளர்கள்மற்றும் உலகளாவியஉணவுசுற்றுச்சூழல் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து அதிக அளவில் உலக உணவு இந்தியா 2017ல் பங்குபெற உள்ளனர்.இந்தியாவை உலக உணவு வரைபடத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும். மாநாடுகள், கண்காட்சிகள், துறையின் குறிப்பிட்ட கருத்தரங்குகள், மத்திய மற்றும் மாநிலஅமர்வுகள்,  இந்தியாவிற்கும் சர்வதேச வணிகங்களுக்கும் இடையே இணைக்கவும் மற்றும் ஒத்துழைப்புக்கான துடிப்பான தளத்தை வழங்குவதற்கான இந்த மூன்று நாள் நிகழ்வு நடைபெற உள்ளது.

இம்மூன்று நாட்களில் நடைபெற உள்ள 9 கருத்தரங்குகளில் 2000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், 400க்கும் மேலான காட்சியமைப்பாளர்கள், 20க்கும் மேற்பட்ட நாடுகள், 26 மாநிலங்கள், 50 உலக தலைமைச் செயல் அலுவலர்கள் ஆகியோர் பங்கு கொண்டுதங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தோட்டக்கலைத் துறைபோன்ற அரசு துறைகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்ஆகியவற்றின் பொருட்கள் காட்சியமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் வலிமை மற்றும் வாய்ப்புகளை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்படும்.

விவசாயிகள்மற்றும்முன்னோடிஉழவர்உற்பத்தியாளர்அமைப்புகள்மற்றமாநிலதொழில்முனைவோருடனானகலந்துரையாடல்நடைபெறஉள்ளது.  இந்நிகழ்ச்சிக்கு முகமைத்துறையாக உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது.நவம்பர் 4 அன்று மாலை 5 மணிக்குஹால் எண் 4, விக்யான் பவனில் தமிழ்நாடு மாநிலஅமர்வு நடைபெறஉள்ளது. இந்நிகழ்ச்சியை  பிரதமர் நாளை( 3 ம் தேதி )  துவக்கிவைக்க உள்ளார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு  தமிழக முதல்வர் சார்பாக கலந்துகொள்வார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here