Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

22
0
SHARE

* பெண் உதவியாளரிடம் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய 2 செக்ஸ் பொம்மை வாங்கி வரும்படி கூறியதாக இங்கிலாந்து மந்திரி மார்க் கார்னியர் ஒப்புக் கொண்டுள்ளார்.

* வருமானத்துக்கு அதிகமாக 83 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த ஊழல் வழக்கில் ஆஜராக தவறிய பாகிஸ்தான் நிதி மந்திரிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா பிரதமர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.

* ஜெய்ஷ்&&முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தடுக்க சீனா முடிவெடுத்துள்ளது.

* வழிப்பறி மற்றும் கற்பழிப்பு வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கெல்வின் சிங் ஜக்ஜித் (வயது 25) என்ற வாலிபருக்கு 17 ஆண்டு சிறைவாசமும், 24 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.