Home மற்றவை நிர்வாகரீதியாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை மாற்ற ‘திடீர்’ தடை!பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு

நிர்வாகரீதியாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை மாற்ற ‘திடீர்’ தடை!பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு

34
0
SHARE

சென்னை, நவ.1&

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017&18 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

மேலும் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர், மாணவர்களின் நலன், பள்ளிகளின் நலன் கருதி நிர்வாக காரணங்களின் அடிப்படையில் மாறுதல் வழங்கிட அவசியமிருப்பின், பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை நிர்வாக மாறுதல் வழங்கிட வேண்டும் என்ற நெறிமுறையின் படி, தற்பொழுது வரை தொடர்ந்து நிர்வாக மாறுதல் அந்ததந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் புதிய நெறிமுறைகள் வேண்டும் என பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கேட்டுள்ளனர்.

அதன்படி, இனி வரும் காலங்களில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் போது கடைபிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.

பள்ளிகள் நடைபெறும் காலங்களில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களின் நிர்வாக மாறுதல்கள் மேற்கொள்ளப்படுவதால், பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆசிரியர்களுக்கான நிர்வாக மாறுததல்களை முதல் மற்றும் 2 ம் பருவ விடுமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடுமையான புகார்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான மாறுதல்களை மட்டுமே எப்போதும் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் 3 பருவ விடுமுறையான மே 1 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை ஆசிரியர்களுக்கான காலந்தாய்வினை ஆசிரியர்கள் பொதுமாறுதல்  கலந்தாய்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அரசாணையின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.