Home விளையாட்டு டி&20 கிரிக்கெட் தொடர் இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்

டி&20 கிரிக்கெட் தொடர் இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்

13
0
SHARE

புதுடெல்லி, நவ.1&

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டி&20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

கனேவில்லியம்சன்தலைமையிலானநியூசிலாந்துகிரிக்கெட்அணிஇந்தியாவில்சுற்றுப்பயணம்செய்துவிளையாடிவருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2&1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் டெல்லி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஒருநாள் தொடரை வென்றது போல 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விராத் கோலி அணி உள்ளது.

ஒருநாள் தொடரில் ஆடிய வீரர்களே இதிலும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. பேட்டிங்கில் கேப்டன் விராத் கோலி, ரோகித் சர்மா, தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும், பந்துவீச்சில் பும்ரா, சஹல் ஆகியோரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

மூத்த வீரரான ஆசிஷ் நெக்ரா நவம்பர் 1&ந் தேதியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். 20 ஓவர் போட்டியில் மட்டும் ஆடி வந்த அவர் இதற்காகவே அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் தனது கடைசி போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் நெக்ராவுக்கு வாய்ப்பு கிடைக்குமா.? என்பது சந்தேகமே. அவர் 20 ஓவர் போட்டியில் 26 ஆட்டத்தில் விளையாடி 34 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

ஒரு வேளை நெக்ராவுக்கு கடைசி ஆட்டத்தில் வாய்ப்பு கொடுக்க நினைத்தால் புவனேஷ்வர்குமார் கழற்றி விடப்படலாம். அக்ஷர்பட்டேல் நீக்கப்பட்டால் குல்தீப் யாதவ் இடம் பெறுவார்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர், முன்ரோ, குப்தில் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், சவுத்தி, மிலின் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். இரு அணிகளும் மோதும் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.