Home சம்பவம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டல்: பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி...

ஆபாசமாக பேசி பாலியல் சீண்டல்: பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

31
0
SHARE

சென்னை, ஆக. 19&

கொடுங்கையூர் பகுதியில், பிளஸ் ஒன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஆசிரியர்கள் இருவர், ஆபசமாக பேசி, பாலியல் சீண்டல் செய்ததால், மாணவன் தற்கொலை செய்துக்கொண்டதாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாகும் முன்பு, மாணவன் எழுதி வைத்த கடிதமும் சிக்கியது.

சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, இந்திரா நகரை சேர்ந்தவர் புகழேந்தி, இவரின் மனைவி அம்மு, இவர்களின் மகன் சக்திவேல்(15),  இவர், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்றில், பிளஸ் ஒன் படித்து வந்தார். நேற்று , பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய சக்திவேல், தனது அறையை விட்டு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லையாம். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருப்பதாக, பெற்றோர் நினைத்து விட்டனர். ஆனால், தொலைக்காட்சி சத்தமும் கேட்காததால், சந்தேகமடைந்த பெற்றோர், அறையின் கதவை திறக்க  முயன்றனர். ஆனால், கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர், கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு, சக்திவேல், தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்த தகவல் கிடைத்ததும், கொடுங்கையூர் போலீசார் விரைந்து வந்து, மாணவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், பாடத்தை சரியாக கவனிக்காத காரணத்தால், தண்டனை என்ற பெயரில், பள்ளியின் ஆசிரியர்கள் இருவர், சக்திவேலுவின் சீருடையை கழட்டி, ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலை, சக மாணவர்கள் மத்தியில் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த சக்திவேல் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பு, எழுதி வைத்த கடிதத்தில், தனது சாவுக்கு, பள்ளி ஆசிரியர்கள் கனகராஜ், புருஷோத்தமன் என கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையில், பள்ளி முன்பு,  மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவன் சக்திவேல் சாவுக்கு காரணமான ஆசிரியர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அவர்களை இனி எந்த பள்ளியிலும் வேலைக்கு சேர்க்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர். இதை போன்று, திருவொற்றியூரில் ஒரு பள்ளியில், மாணவனை காதலிப்பதாக ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த பாதரியார் ஒருவர் தலைமறைவாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.