Home தமிழகம் ஆர் இலான் உடன் ரிலையன்ஸ் இணைகிறது

ஆர் இலான் உடன் ரிலையன்ஸ் இணைகிறது

11
0
SHARE

சேலம், நவ. 1&

ரிலையன்ஸ் நிறுவனம், ஆர் இலான் என்ற உயர் செயல் திறன்மிக்க ஆடைகள் அறிமுகத்தின் மூலம் கூட்டு பிராண்டு ஆடைத் தொழிலில் நுழைந்திருக்கிறது. முதன்மை வகிக்கும் தொழில் முன்னோடி என்ற வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்ன் பாலியஸ்டர் பிரிவு, சாதாரண மனிதனுக்கு மதிப்பு கூட்டப்பட்ட, எளிய பராமரிப்புடைய மற்றும் மிகவும் சவுகரியமான துணிகளையும், ஆடைகளையும் வழங்குவதற்குரிய முயற்சிகளில் எப்போதும் ஈடுபட்டுவந்திருக்கிறது.

விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைத் தொடர்ந்து, இழை மறு பொறியியலில் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சிறப்பு துணிப்படைப்பான ஆர் இலானை ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆர் இலான் ஆனது, ஆக்டிவ்வேர், டனிம், பார்மல் வேர், கேஷீவல் மற்றும் எத்னிக்வேர் போன்ற அனைத்து ஆடைப்பிரிவுகளிலும் உள்ள செயல்திறன் பண்புகளை அதிகரிக்க செய்கிறது.

இந்ததுணிகள், இந்தியாவின் பல்வேறு ஜவுளி உற்பத்தி மையங்களில் செயல்படுகின்ற ஹப் எக்ஸெலன்ஸ் புரொகிராம் கூட்டாளிகளின் தீவிர பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன

ரேங்லர் பிராண்டின் உரிமையாளரும் மற்றும் உலகளவில் மிகப்பெரிய டெனிம் உருவாக்குபவருமான ஏகு கார்ப்பரேஷன் உடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டு வகிப்பு செய்துள்ளது. ஆர் இலான் கூல் டெக்ஸ் என்பது, ஆடையில் ஈரத்தை சமாளிக்கும் திறன கொண்ட ஒரு செயல்திறன மிக்க நூலிழையாகும். இது, ரேங்லர் பிராண்டு தயாரிப்பாளர்களின் ஏற்பைப்பெற்றுள்ளது.

ஏகு ஆனது, அதன் ஆசிய சந்தைகளான அதாவது சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் 2018 வசந்தகாலம் கோடை காலத்திற்கு கூல் டெக்ஸ் துணியில் செய்யப்பட்ட இன்பிகூல் டெனிம் ரகத்தை அறிமுகப்படுத்தும்.

புழுக்கமானகோடைமாதங்களில்குளுகுளுவெனவியர்வைஒட்டாமல்உலர்ந்திருக்கும்செயல்திறனுடையடெனிம்ஆடைகளைஅணியும்படிஇளம்ஆண்கள்மற்றும்பெண்களைத்தூண்டவைத்துஊக்கப்படுத்துவதேஇந்தஇரகத்தின்நோக்கமாகும். செய்யப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தின்படி ஆடைகளில் தொங்கு அட்டைகள் (ஹேங்டேகுகள்) வடிவிலும் மற்றும் விற்பனை இடங்களில் ஒளிபரப்பப்படும் யு.. வடிவிலும் ஆர் இலான் பார்வைக்குப் படும்படி செய்விக்கப்படும். பதிலுக்கு ரிலையன்ஸ் நிறுவனம்.

அதன் தரப்பில், உயர்தரமுடைய, உயர்செயல்திறனுடைய ஆர் இலான் துணிகள் டெனிம் பயன்பாட்டிற்காக ஏகுக்கு பிரத்தியேகமாக சப்ளை செய்யப்படுவதை உறுதிசெய்யும்.

ஆர் இலான் கூட்டுபிராண்டு வகிப்பு செயல்பாடு, ஏறக்குறையஒரு 5050 ஆண்கள் ஆடைகள் மற்றும் பெண்கள் ஆடைகள் என பங்கு கொண்ட ரூ.2,50,000 கோடி இந்திய ஆடைத்தொழிலில் வலுவாக காலூன்றுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உதவும்.