Home தமிழகம் தவறான சிகிச்சையால் மாணவி பலி என கூறி தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

தவறான சிகிச்சையால் மாணவி பலி என கூறி தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

27
0
SHARE

சோழிங்கநல்லூர், ஆக. 20& சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேனி கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர தாவூத். இவரது மகள் பர்துன் நிஷா (17). சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காலில் வெண்ணீர் கொட்டியதால் அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது காலில் கட்டுக்கள் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பர்துன் நிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீ காயத்திற்கு காலில் கட்டுக்கள் போட்டு தவறான சிகிச்சையளித்தன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகள் அடித்து நொருக்கினர். கிழக்கு கடற்கரையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலாங்கரை உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.