Home சம்பவம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் சிறையில் ஜீவசாமாதி அடைய முயற்சி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் சிறையில் ஜீவசாமாதி அடைய முயற்சி

33
0
SHARE

வேலூர், ஆக. 19&

சிறையில் ஜீவசாமாதி அடைய முருகன் முயற்சி செய்வதால் சிறைக்காவலர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தபட்டு ஆயுள் தண்டணை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் முருகன் அவரது மனைவி நளினியும் வேலூர் சிறைகளில் தண்டணை அனுபவித்து வருகின்றனர் இவர்கள் 26 ஆண்டுகளுக்கு மேலாளாக சிறை தண்டணை அனுபவித்து வருகின்றனர் இதனால் மாதம் கடைசி வாரம் சனிக்கிழமை அன்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை ஆண்கள் சிறையில் உள்ள முருகன் சந்தித்து வருகிறார்.

ஆனால் ஆயுள் தண்டணை அனுபவித்து வந்த ராஜீவ் கொலை குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதி வரை மனு அளித்து பார்த்தும் வெளியில் விட மறுக்கபட்டது. கடையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரபட்டும் அதற்கு மத்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கபட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறபட்டது இதனால் குற்றவாளிகள் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைக்காத நிலையில் முருகன் சிறையில் தியானம் மேற்கொண்டு ஒரு காலகட்டத்தில் காவி உடையணிந்து சாமியாராக மாறிவிட்டார்.   சிறையில் செல்போன் வைத்திருந்த்தாக முருகனை வேலூர் நீதிமன்றத்திற்க்கு கொண்டுவரபட்டபோது அவரை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் ஜடாமுடிதரித்து நீண்ட தாடியுடன் சாமியாராக மாறியிருந்தார். அப்போது சிறை அதிகாரிகளிடம் எனக்கு வாழ்க்கை வெறுத்து போய்விட்டது அதேபோல் விடுதலை அடைவேன் என்ற நம்பிக்கையும் போய்விட்டது .அதனால் எனது மனைவியிடம் கூறிவிட்டேன். அதனால் நான் ஜீவசமாதி அடைய போகிறேன் என கூறியுள்ளார். இதனால் முருகன் ஒரு வேளை சாப்பிட்டு மற்ற வேளைகளில் பழம் பால் சாப்பிட்டு தியானத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறபடுகிறது.  அதன்பேரில் ஆகஸ்ட் 18 ம்தேதி சிறையில் ஜீவசமாதி அடைய போவதாக சிறை துறை கூடுதல் டி.ஜி.பி.க்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினார்.இன்று தேதி 18 என்பதால் காலையில் முருகன் எழுந்து யாரிடமும் பேசாமல் சிறையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்தார். பிறகு சாப்பிட மறுத்து ஜீவசமாதி அடையும் வேலைகளில் ஈடுபட்டார். இதை கவனித்து வரும் சிறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கூறும் எந்த செயலுக்கும் செவிசாய்காமல் வடக்கு முகமாக அமர்ந்து மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.

காலையில் இருந்து உணவு சாப்பிடாமல் முருகன் அடம்பிடித்து வருவது அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. மேலும் சிறை அதிகாரிகள் மூலம் ஜீவசமாதி அடைய அனுமதி வேண்டி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் சிறை வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது.