Home சுடச்சுட மழையில் ஒழுகும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரை

மழையில் ஒழுகும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரை

32
0
SHARE

 சென்னை, நவ. 1&

மழையில் ஒழுகும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையால் பயணிகள் அவதியடைந்தனர்.

தமிழகத்தில வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னையில் மழை பெய்தது.

தமிழகத்தின்கடலோரமாவட்டங்களில்கனமழைபெய்யும்எனவானிலைஆய்வுமையம்அறிவித்திருந்ததையடுத்துகாஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர் புதுச்சேரி போன்ற இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது.மழையினால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை பெய்த மழையின் போது சென்னை சென்டரல் நிலையத்தின் மேல் கூரை ஒழுகியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். பயணி ஒருவர் தன் செல்போனில் இதை வீடியோ எடுத்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்.

வைரலாகபரவிக்கொண்டிருந்தவீடியோகுறித்தும்ரயில்நிலையமேற்கூரைஒழுகுவதைதடுக்கரயில்வேநிர்வாகம்எடுக்கும்நடவடிக்கைகுறித்துசெய்தியாளர்கள்கேட்டனர்.அப்போது தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது மழை நீர் சூழாமல் தடுக்கவும்  சூழ்ந்துள்ள நீரை அகற்றவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு இறுதியில் மேர்கூரையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் 3 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.