Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

25
0
SHARE

 

கடவுளின் பூமியாக இருந்த இமாச்சல பிரதேச மாநிலத்தை, குற்றவாளிகள் நிலமாக காங்கிரஸ் மாற்றியுள்ளது. மாநிலத்தின் பெயரை கலங்கப்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போல் இங்கும் காங்கிரசுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.

& உத்தரப் பிரதேச முதல்வர்,

யோகி ஆதித்தியநாத்.

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். எனினும் சித்தராமையா முதல்வராக முடியாது. பொதுக்குழு கூட்டிதான் முடிவெடுப்போம். கட்சி மேலிடம் தான் இதுகுறித்து முடிவு செய்யும்.

 

& கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வர்.

காஷ்மீர் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. அக்கட்சியின் அலட்சியமான, சுய ஆதாய செயல்பாடுகளே ஜம்மு& காஷ்மீர் மாநிலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம்.

& மத்திய இணையமைச்சர்,

ஜிதேந்திர சிங்.

மத்திய அரசு மக்களுக்கு என்ன செய்தது.? போலீஸ் அதிகாரி கணபதி விவகாரத்தில், அமைச்சர் ஜார்ஜ் ராஜினாமா செய்ய தேவையில்லை.? இதுபோன்ற விவகாரங்கள் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடந்து உள்ளது. அவர்கள் என்ன ராஜினாமா செய்தார்களா.?

& கர்நாடக முதல்வர். சித்தராமையா.