Home அரசியல் தண்ணீர் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது வைகோ பேட்டி

தண்ணீர் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது வைகோ பேட்டி

36
0
SHARE

கரூர், ஆக. 19 &

தண்ணீர் பிரச்சனையில் மத்திய மாநில் அரசுகள் கூட்டு சதியில் ஈடுபட்டள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி அவருடைய பதவியை ராஜினாம செய்ய வேண்டும் என ம.தி.மு.க. கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க., கட்சியின் பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, கர்நாடகா மாநிலத்தில் மேகதாது பகுதியில் அணைகட்ட ஆட்ஷேபனை இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளனர்.மேகதாதுவில் அணை கட்டினால் கிருஷ்ணராஜர், கபினி அணைக்கு தண்ணீர் வரத்து குறையும். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா அரசு மூனரை லட்சம் ஏக்கர் அளவில் பாசனத்தை விரிவுபடுத்தியுள்ளனர். 30ஆயிரம் குளங்களை அமைத்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் 17மாவட்டங்களுக்கு குடிநீர் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.இதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது நதிபிரச்சனை உரிமைக்காக குரல் கொடுக்க அவரை போல் யாரும் இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி போல் துரோகம் செய்ய யாரும் கிடையாது.பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். அவர் உடனே முதல்வர் பதவியை ராஜினாம செய்ய வேண்டும்.நதிநீர் பிரச்சனையில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டு குற்றவாளிகளாக செயல்பட்டுள்ளனர்.எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி வரும் 21ம் தேதி சென்னையில் எனது தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். போராட்டத்துக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சி தொண்டர்கள் மற்றும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்களிடம் வைகோ கூறினார்.