Home அரசியல் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை  மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை  மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

23
0
SHARE

சென்னை, அக்.31& பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும்   அரசு எடுக்காததால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வானிலை ஆராய்ச்சி மையம் பருவமழை குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது, எனவே, அரசு  உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கையும் வைத்திருந்தேன். ஆனால், தான் இதை அரசியலாக்குவதாக சொல்லி, வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான பிரசாரம் செய்தனர். எனவே, அடுத்த நாளே நான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை  தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று, அங்கிருக்கக்கூடிய பிரச்னைகளை எல்லாம் நேரில் பார்த்து, மழை தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்த கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.  ஓரிரு நாட்களில் இந்தப் பணிகளை அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ளாவிட்டால் தி.மு.வினர் தங்களால் முடிந்தவரையில் அந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று சொல்லி இருந்தேன்.

தான் பார்த்துவிட்டு வந்தபிறகு, அந்தப் பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு சீர்படுத்தி இருக்கின்றனர்.  ஆகவே, அந்தப் பகுதியில் மட்டுமல்ல, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்னைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அங்கெல்லாம் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஈடுபட்டிருந்தால், நீங்கள் கேட்பது போல, ஒருநாள் மழைக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்.