Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி& 27

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி& 27

12
0
SHARE

ஹாம் வானொலியில்ஜம்போரேஎனும் வார்த்தையை கேட்காமல் யாரும் இருந்திருக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும்ஜோட்டா ஜோட்டிநிகழ்வு உலகம் முழுவதும் அக்டோபர் திங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கும்ஜம்போரேவுக்கும் என்ன தொடர்பு? இதற்கும் ஹாம் வானொலிக்கும் என்ன தொடர்பு? போன்றவற்றைத் தான் இந்த பகுதியில் நாம் காணவுள்ளோம்.  ஹாம் வானொலியினர் பல்வேறு வகைகளில் சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் இந்தஜம்போரே’.

யிணீனீதீஷீக்ஷீமீமீ ஷீஸீ tலீமீ கிமிஸி யிணீனீதீஷீக்ஷீமீமீ ஷீஸீ tலீமீ மிஸீtமீக்ஷீஸீமீt ஆகியற்றின் சுருக்கம் தான்ஜோட்டா’ (யிளிஜிகி) ஜோட்டி (யிளிஜிமி). உலகம் முழுவதும் ஆண்டு தோறும் இந்த ஜோட்டா ஜோட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஜம்போரே என்ற வார்த்தையானது 1920 முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஸ்கவுட் மாணவர்களை ஒன்றிணையும் ஒரு திருவிழாவினை ஜம்போரே என்று அழைத்தனர். பிற்பாடு, எப்பொழுது எல்லாம் இவர்கள் கூடுகிறார்களோ, அப்பொழுது எல்லாம் இந்த வார்த்தையைப் பயன்படுத்த தொடங்கினர். ளிறீணீஸ்மீ, லிணீபீஹ் ஙிணீபீமீஸீ றிஷீஷ்மீறீறீ ஆகியோர் முதலில் இந்த வார்த்தையை உருவாக்கி பயன்படுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் மூன்றாவது வாரத்தின் இறுதியில் இந்த ஜோட்டா ஜோட்டி நிகழ்வானது கொண்டாடப்படுகிறது. ஸ்கவுட் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி 1957 ஆண்டு லிமீsறீவீமீ ஸி.விவீtநீலீமீறீறீ (நி3ஙிபிரி) அவர்களின் ஏற்பாட்டில் இந்த ஜோட்டா நிகழ்வானது தொடங்கப்பட்டது. இவரும் ஒரு ஹாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று உலகம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

அவசர காலங்களிலும், ஆபத்து காலங்களிலும் ஸ்கவுட் மற்றும் கைடுகள் உதவி செய்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால் அது போன்ற காலங்களில் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதனால் சரியாக களத்திற்கு சென்று சேவையாற்ற முடிவதில்லை. அதற்கு இந்த ஹாம் பெரிதும் உதவுகிறது. எனவே, ஸ்கவுட்டில் உள்ள மாணவர்களுக்கு ஹாம் வானொலி என்றால் என்ன? அதனை எப்படி பயன்படுத்துவது? போன்ற விபரங்களை இந்த நாளில் சொல்லிக் கொடுப்பதுடன், அவர்களுக்கு ஹாம் வானொலிப் பற்றிய முக்கியத்துவத்தினையும் கூறுவதே இந்த நாளின் சிறப்பாகும்.

இன்று ஹாம் வானொலியை நமது கைப்பேசியிலும் பயன்படுத்தலாம். 2004 முதல் இந்த ஜோட்டா நிகழ்வில் கைப்பேசியில் எக்கோ லிங்க் (ணிநீலீஷீ லிவீஸீளீ) துணை கொண்டு எப்படி மற்ற ஹாம்களை தொடர்பு கொள்ளலாம்? என்று கற்றுத்தரப்படுகிறது. னிஷிலி வண்ண அட்டைகள் பற்றியும் அதனை எப்படி ஹாம் வானொலிகளைத் தொடர்பு கொண்டு பெறுவது? பற்றியும் விரிவாக கற்றுத் தரப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குபாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆஃப் அமெரிக்காசிறப்பு முத்திரையுடன் கூடிய பேட்ஜ் வழங்கி அங்கீகரிக்கிறது.

ஜோட்டி நிகழ்வானது 1995 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ல் தான் முதன் முதலில் நெதர்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இணையத்தின் ஊடாக செய்தியானது பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வும் அதே அக்டோபர் மூன்றாவது வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களைஸ்கவுட் ரேடியோவில்’ (ஷ்ஷ்ஷ்.sநீஷீutக்ஷீணீபீவீஷீ.ஷீக்ஷீரீ.uளீ) பேட்டி கண்டு உலகம் முழுவதும் ஒலிபரப்புகின்றனர்.

ஜோட்டி நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள்சர்வதேச தொடர் உரையாடல்’ (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஸிமீறீணீஹ் சிலீணீt) நிகழ்வில் எப்படி கலந்து கொள்ள வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டு கலந்து கொள்கின்றனர். இதற்காக சிறப்பு ஐ.ஆர்.சி மென்பொருள் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. 1988ல் யிணீக்ஷீளீளீஷீ ளிவீளீணீக்ஷீவீஸீமீஸீ எனும் பின்லாந்து நாட்டுக்காரரால் இது தொடங்கப்பட்டது.

ஜோட்டா ஜோட்டி நிகழ்வானதுஸ்கவுட்டிற்கான உலக அமைப்பின் இயக்கத்தினால்அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக உலகம் முழுவதும் உள்ள சக ஸ்கவுட் மாணவர்களுடன் ஹாம் ரேடியோ ஊடாகவும், இணையம் மூலமாகவும் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்? உலகளாவிய ஸ்கவுட் இயக்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? போன்ற விபரங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

2017ஆம் ஆண்டுக்கான ஜோட்டா ஜோட்டி நிகழ்வானது 20 முதல் 22 அக்டோபர்  வரை உலகம் முழுவதும் நடைபெற்றது. இங்கு சென்னையில்வண்டு நெட்’ (ஷ்ஷ்ஷ்.ஸ்ணீஸீபீuஸீமீt.நீஷீனீ) குழுமத்தின் ஹாம்களால் வெகுசிறப்பாக இரண்டு இடங்களில் நடைபெற்றது. சென்னைப் பம்மலில் உள்ள சங்கரா வித்யாலயாவிலும், மெரினா கடற்கரை எதிரில் உள்ள தமிழக ஸ்கவுட் தலைமையத்திலும் ஸ்கவுட் மற்றும் கைடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது 19 முதல் 21 அக்டோபர் வரை உலகெங்கும் நடைபெறும்.

பேட்டா பேட்டி

நாம்அனைவரும்பேட்டாபேட்டிஎன்றால்அறிவோம், அது என்ன ஜோட்டா ஜோட்டி? அதனை தெளிவாக விளக்கும் இணையதளம் தான் இந்த ஷ்ஷ்ஷ்.ழீஷீtணீழீஷீtவீ.வீஸீயீஷீ. இந்த இணையதளத்தில் ஜோட்டா ஜோட்டியின் வரலாறு, உலகம் முழுவதும் பதிவு பெற்ற ஜோட்டா ஜோட்டி நிலையங்களின் விபரங்கள், ஜோட்டாவின் சட்ட திட்டங்கள், அமெச்சூர் வானொலி என்றால் என்ன? ரேடியோ நீணீறீறீ sவீரீஸீs பற்றிய விபரங்கள், ஸ்கவுட் ரேடியோ நெட்ஸ்,  ரேடியோ டி.எக்ஸ் கிளஸ்டர், எக்கோ லிங்க், ஹாம் போட்டிகள் நடைபெரும் அலைவரிசைகள் போன்றவை உள்ளன.

ஜோட்டியைப் பொருத்தமட்டில், எப்படி இணையதளத்தினை பாதுகாப்பாக பயன்படுத்தவது?  இணையத் தொடர்பின் போது பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள், பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் எவை? ஸ்கவுட் லிங்க் என்றால் என்ன? இணைய தளத்திலேயே இயங்கக்கூடிய ஹாம் வானொலிகள் பற்றிய விபரங்கள், ஜோட்டி ரேடியோ, ஜோட்டி டி.வி, ஜாம்பஜ், புதிக ஹாம் கண்டுபிடிப்புகள், வாக்கீ டாக்கீஸ் பற்றிய விபரங்கள், ஜோட்டா ஜோட்டி ஸ்டிக்கர், ஹாம் பேட்ஜ்களுக்கு யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விபரங்களை இந்த ஷ்ஷ்ஷ்.ழீஷீtணீழீஷீtவீ.வீஸீயீஷீ இணையதளத்தினில் வழங்கியுள்ளனர்.

பங்கேற்பாளர் கையேடு

உலகின் மிகப்பெரிய ஸ்கவுட் திருவிழா பற்றி ஏதேனும் புத்தகங்கள் உள்ளனவா? என்று கேட்பவர்களுக்காவே வெளிவந்துள்ள புத்தகம் தான் இந்தயிளிஜிகி யிளிஜிமி றிணீக்ஷீtவீநீவீஜீணீஸீt’s நிuவீபீமீ”. இந்த புத்தகத்தில் ஜோட்டா ஜோட்டி பற்றி ஒரு விபரங்களும் தெரியாதவர்களுக்கும், அத்தனை தகவல்களையும் கொட்டிக் கொடுத்துள்ளனர். ஜோட்டா ஜோட்டி நிகழ்வில் கலந்து கொள்வதால் என்ன பயன்? ஜோட்டா ஜோட்டி நிகழ்வில் கலந்து கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதில் உங்கது பணி என்னவாக இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு இந்த இணைய தளத்தினில் பதில்கள் கொட்டிக் கிடக்கிறது.

மேலும் அமெச்சூர் வானொலி பற்றிய அறிமுகம், ஆன்லைன் சாட் மற்றும் இணைய தள பயன்பாடு குறித்த தகவல்களும் இந்த புத்தகத்தில் அடக்கம். ஜோட்டா ஜோட்டி நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள், ஜோட்டா ஜோட்டி வானொலி மற்றும் தொலைக்காட்சி பற்றிய விபரங்கள், முக்கியமாக இந்த நிகழ்வின் முக்கியக் கொள்கைகள், நோக்கங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை விரிவாக இந்த நூலில் ஸ்கவுட் அமைப்பு விளக்கியுள்ளது. இலவசமாகவே இ&புத்தகமாக தரவிறக்கம் செய்துகொள்ள ஷ்ஷ்ஷ்.ழீஷீtணீழீஷீtவீ.வீஸீயீஷீ/ஷ்ஜீநீஷீஸீtமீஸீt/uஜீறீஷீணீபீs/2017/04/யிளிஜிகியிளிஜிமிறிணீக்ஷீtவீநீவீஜீணீஸீtsநிuவீபீமீ_க்ஷி1.ஜீபீயீ எனும் முகவரியில் கிடைக்கிறது.

வோல்ட் வைடு ஸ்கவுட்ஸ்

இன்று அனைவரும் எந்த விபரத்தினை தேடினாலும், முதலில் அந்த விபரம் இணையத்தில் உள்ளதா? எனத் தேடுவோம். அதனை அடுத்து கைப்பேசி செயலியாக உள்ளதா? எனவும் தேடுவோம். அப்படி தேடுபவர்களுக்கு ஒரு அருமையான செயலியாக கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ ஷிநீஷீuts உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஸ்கவுட்ஸ் பற்றிய விபரங்கள், ஜோட்டா ஜோட்டி நிகழ்வின் போது உலகம் முழுவதும் உள்ள ஸ்கவுட்களை எளிதாக தொடர்பு கொள்வதற்கான வழிமுறை ஆகியவற்றை இந்த செயலி கொண்டுள்ளது. 7.6 எம்.பி மெமரி திறன் கொண்ட இந்த செயலியின் துணை கொண்டு ஸ்கவுட் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆப்பிள் ஐ..எஸ் மற்றும் ஆண்டிராய்ட் செயலியில் ஜோட்டா ஜோட்டிக்கு என தனியான பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோட்டா ஜோட்டி பற்றி ஒன்றும் தெரியாதவர்களும் இந்த நிகழ்வில் எப்படி கலந்து கொண்டு உதவலாம்? ஜோட்டா ஜோட்டி நிகழ்வானது உலகம் முழுவதும் எந்த நாடுகளில், எந்த அலைவரிசைகளில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன போன்ற விபரங்களையும் இந்த கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ ஷிநீஷீuts செயலி தருகிறது. மேலும் வழக்கமான ஹாம்களும் சிற்றலை நேயர்களும், ஜோட்டா ஜோட்டி வானொலி ஒலிபரப்பினை கேட்டுவிட்டு னிஷிலி வண்ண அட்டைகளை யாருக்கு எழுதிப் பெறலாம் போன்ற தகவலும் இதில் அடக்கம்.

அடுத்த வாரமும் கேட்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here