Home தமிழகம் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாமுதல்வர், துணை முதல்வர் சுற்றறிக்கை

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாமுதல்வர், துணை முதல்வர் சுற்றறிக்கை

10
0
SHARE

சென்னை, அக். 30&

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று திங்கட் கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கும், சென்னை நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கும், தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு தேவர் வுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here