Home சுடச்சுட வங்க தேசத்திற்கு கப்பல் வழியாக சரக்கு லாரிகள் ஏற்றுமதிமத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

வங்க தேசத்திற்கு கப்பல் வழியாக சரக்கு லாரிகள் ஏற்றுமதிமத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

19
0
SHARE

சென்னை, அக். 29&

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அசோக்லேலண்ட் நிறுவனத்தின் சரக்கு லாரிகள் நேற்று சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மத்திய கப்பல் துறை அமைச்சர் நித்ன் கட்காரி தொடங்கிவைத்தார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி கையெழுத்திட்ட இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வாகன ஏற்றுமதித்திட்டத்தின் படி, முதற்க்கட்டமாக நேற்று சென்னை துறைமுகத்திலிருந்து, கப்பல் வழியாக வங்கதேசத்திற்கு அசோக் லெலண்ட்டின் 185 சரக்கு லாரிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்திட்டத்தினை மத்திய கப்பல்துறை அமைச்சர் நித்ன் கட்காரி நாக்பூரில் இருந்தபடியே காணொலியின் மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இத்திட்டத்தினை மத்திய கப்பல், போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை துறைமுகத்திலிருந்து தலைமை தாங்கினார்.

இது குறித்து மத்திய கப்பல் துறை அமைச்சர் கூறுகையில், இந்தியா மற்றும் பாங்கலாதேஷ்ன் உறவை மேம்படுத்தும் விதமாக கடந்த 2015 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் இந்தியா மற்றும் பாங்கலாதேஷ் இடையே வாகன ஏற்றுமதித்திட்டம் போடாப்பட்டது. அதன் அடிப்படையில்  அசோக்லேலண்ட் நிறுத்தின் மூலம் 185 லாரிகள் கப்பல் மார்க்கமாக வங்கசேத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் தொடங்கிவைப்பதன் மூலம் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். இதே போன்று பல்வேறு நாடுகளுக்கு வாகனங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும். இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தரைவழி மார்க்கமாக சென்றால் 1 லட்சம் லாரிகள் வீதம் தேவைப்படும்.

இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால் கப்பல் வழியாக அனுப்பபடுகிறது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் கப்பல் வழிமாக்கமாகவே அனுப்பப்படும்.  இதற்கு உறுதுணையாக இருந்து அசோக்லேலண்ட் நிறுவனத்திற்கும், சென்னை துறைமுகத்தின் அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இது தொடர்பாக மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், பிரதமர் மோடி போட்ட ஒப்பந்ததின் படி பங்கலாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் அசோக்லேலண்ட் நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலிருந்து 12ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. பாங்லாதேஷ்ற்கு

6000 லாரிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ள நிலையில், தற்போது 185 லாரிகள் சென்னை துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. சாலைகளின் மூலமாகவும், ரயிலின் மூலமாகவும் எடுத்துச்சென்றால் சூற்றுச்சூழல் சீர்கேடுகளும், எரிபொருள், பணம் மற்றும் நேரம் ஆகியவை அதிகப்படியாக செலவாகும் என்ற நோக்கில் கப்பல் மார்க்கமாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தரைவழிமார்க்கமாக 20 முதல் 25 நாட்கள் எடுக்கும் பட்சத்தில் நீர்வழியில் வெறும் 5நாட்களில் சென்றடைய முடியும். கூடிய விரையில் இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக லாரிகள் ஏற்றுமதி செய்யப்படும். கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யும் பொழுது உள்நாட்டிற்கு 80 சதவீதமும், வெளிநாடுகளுக்கு 40 சதவீதமும் சலுகை அளிக்கப்படுகிறது.

ஆனால் வங்கசேத்தை பொறுத்தவகையில் அவை உள்நாட்டு ஒப்பந்தின் அடிப்படையிலே போடப்பட்டுள்ளது. எனவே 80 சதவீத சலுகையுடன் வழங்கப்படுகிறது. மதுரவாயில் பறக்கும் சாலையாது மேலும் 10கிலோமீட்டர் தூரம் விரிவுபடுத்தப்படும். என்றார். வீக்கிப்பிடியாவில் உங்கள் பெயர் பொரி உருண்டை என்று மாற்றப்பட்டதே என்ற கேள்விக்கு சிரித்தபடியே மாற்றினாள் மாற்றிக்கொள்ளட்டும். என்றார்.