Home சுடச்சுட டிஜிட்டல் இந்தியாவால் 358 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன

டிஜிட்டல் இந்தியாவால் 358 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன

23
0
SHARE

புதுடெல்லி, அக். 29

பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல் மயத்துக்கு மாறி வருவதால் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை 358 .டி.எம்.களை சில வங்கிகள் மூடியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8&ந் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பை கொண்டு வந்தது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பணமதிப்பிழப்பாலும், வங்கி ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு அபராதம் விதிப்பதாலும் பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல்மயத்துக்கு மாறிவிட்டன.

இதனால் ஏ.டி.எம் மையங்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்து விட்டதால். வங்கிகளுக்கு கடினமாக இருந்தன. இதனால் நாட்டில் மிகப்பெரிய ஏ.டி.எம். நெட்வொர்க்கை கொண்ட பாரத ஸ்டேட் வங்கி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கையை 59,291லிருந்து 59,200ஆக குறைத்தன.

அதேபோல்பஞ்சாப்தேசியவங்கியும் 10,502லிருந்து 10,083 .டி.எம்களாக குறைத்துவிட்டன. எச்.டி.எப்.சி வங்கியும் 12,230 .டி.எம்.களிலிருந்து 12,225ஆக

குறைத்துவிட்டன.

விமான நிலையங்கள் மற்றும் மும்பையின் முக்கிய இடங்களில் உள்ள 35 சதுர அடி இடம் கொண்ட ஏ.டி.எம் மையங்களின் வாடகை மாதத்துக்கு ரூ.40 ஆயிரம் உள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. அதேபோல், மெட்ரோபாலிட்டன் நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரில் ஏ.டி.எம்.களுக்கான மாத வாடகை ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. மேலும் ஏ.டி.எம் மையங்களுக்கான பாதுகாவலர், பராமரிப்பு செலவு, மின் கட்டணம் என மொத்தமாக மாதத்துக்கு ரூ.30,000லிருந்து ரூ.1 லட்சம் வரை ஆகிறது என வங்கிகள் தெரிவித்துள்ளன. இதனால் ஒரு வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பக்கத்தில் அதே வங்கி அல்லது அந்த வங்கியுடன் தொடர்புடைய மற்றொரு வங்கிகளின் ஏ.டி.எம். இருந்தால் ஒன்றை மூடுவது என்ற முடிவுக்கு வங்கிகள் வந்துவிட்டன.

அதன்படி மொத்தம் 358 .டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளன.