Home சிறப்புச் செய்திகள் தியானம் செய்… தியானம் என்றால் என்ன?

தியானம் செய்… தியானம் என்றால் என்ன?

62
0
SHARE

குறித்த ஒரு பொருளின் மீது மனத்தினை நிறுத்தி வைப்பதே தியானம். ஆனந்த கோட்டையின் வாசலை திறந்து பேரின்பம் அளிக்க உதவும் திறவுகோல் தியானமே. இயற்கைக்கு அடிமையிருப்பதை எதிர்க்க உதவும் அமைதியே தியானம். ஆன்மிக வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பானது தியானம். மனச்சஞ்சலத்தால் தடுமாறாமல் ஒரு பொருளின் மீது நிலைத்திருத்தலே தியானம்.

தியானத்தின்மூன்றுபடிகள்

தாரனை, தியானம், சமாதி என பெயர் உண்டு. தியானத்தில் மூளையின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கலாம். தியானத்தில் வியாதிகள் நீங்குகின்றன. சிந்தனைத்திறன் பெருகுகிறது. உறக்கத்தில் ஓய்வு கிடைக்கிறது. மனம் அமைதி அடைகின்றது. தினமும் காலை & மாலை கால் மணி நேரமாவது உலகை மறந்து புலன்களை அடக்கி எண்ண அலைகளை நிறுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் உடலும், உள்ளமும் ஒருங்கே பெருகுமென்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு வழியில் செல்லும். எண்ண அலைகள் சுழன்று கொண்டுதானிக்கிருக்கின்றன. நாம் பல்வேறு சடங்கு, வழிபாட்டு முறைகளையும் தியானத்துடன் ஒப்பிடுகையில் அவை ஆழ்மனதில் உள்ள படிகள் என்று கருத வேண்டும். கடவுளை துதித்து நிவேதன்யம் அளித்து ஆன்மீக மந்திரங்கள், துதிகள், மலர்கள், விக்கிரகம், கோவில்கள், தீப ஆராதனை போன்றவை மனத்தை ஆன்மீக நிலைக்கு உயர்த்துகின்றன. ஆனால் ஆன்மிக உணர்வு நம் ஆன்மாவுக்குள் உள்ளது. வேறிடத்தில் அல்ல. மக்கள் முன் கூறிய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் புரிந்து செல்வதில்லை சரியாக புரிந்து செய்தால் அதுவே தியானத்தின் ஆற்றலாகும்.

இதை எவரும் உங்களிடமிருந்து எடுத்து செல்ல முடியாது. எங்கு நீர், நெருப்பு, சருகுகள், எறும்புப் புற்று, மிருகங்களின் ஓசையும், கூச்சலும் நிறைந்து உள்ளதோ அங்கு தியானம் செய்யக்கூடாது மனச்சோர்வு, சோம்பல், கவலைகள் உடல் நலிவுற்று இருந்தாலும் தியானம் செய்வதில் பலனில்லை. இயற்கை காட்சிகள் அமைதியான இடத்தில் தியானம் பயில வேண்டும்.

எவ்வுயிரும் இன்புற்றிருக்க, எவ்வுயிரும் அமைதி நிலவ, எவ்வுயிரும் ஆனந்தம் பெற எத்திசை உயிர்களும் இவற்றை பெறுக என்று மனத்தில் தியானித்தால் எல்லோரும் நலமடையலாம்.

ஆன்மீக வாழ்விற்கு மிகவும் சிறப்பாக உதவுவது தியானம். உடலைப் பற்றி எவ்வளவு குறைவாக சிந்திக்கிறோமோ அவ்வளக்களவு நல்லது. உடல்தான் நம்மை கீழ்நிலைக்கு தள்ளுகிறது. ஆசையும், பாசமும், உறவும் நம்மை துன்பத்தில் வீழ்த்துகின்றன.

ஒரு காலத்தில் வலிமையும் சுறுசுறுப்பும் பெற்ற மனிதன் வழி தெரியாமல் தன் குடும்பத்தை காப்பாற்ற கொலைகள், கொள்ளைகள் செய்து வந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் அவ்வழியே சென்றபோது தாக்கினான். அதற்கு அந்த முனிவர் திருட்டும், மனிதர்களை கொல்வதும் பாவம். இதில் உன் குடும்பத்தினரும் பங்கு பெறுவார்கள் என்றார். இந்தப் பாவ தொழிலை விடுத்து அப்பா, அம்மா, மனைவி, உறவினர்களை நேசி. உன் பணத்துக்காகத்தான் பங்கு பெறுவார்கள். உன்னை எவரும் மதிக்கமாட்டார்கள் என்றார் முனிவர்.

அவனும் தன் உறவுகளை மறந்துவிட்டு பல வருடங்கள் தவம் இருந்து தியானித்ததால் தூய்மை பெற்று மறுபிறவி பெற்றதுபோல் முனிவாகினான். மனம் தடுமாறாமல் ஒரு பொருளின் மீது நிலைத்திருத்தலே தியானம் ஆகும். உடலுக்கும், உள்ளத்திற்கும் போதிய ஓய்வு கொடுப்பதே தியானம். தியானத்தின் ஆற்றலினால் நாம் விரும்புவது கிடைக்கும்.

தியானத்தின் உதவியினால்தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. இது திடீரென்று வந்த சக்தி அல்ல. மனத்தில் ஏற்கனவே மறைத்து இருக்கின்ற சக்திதான் அது.

மனத்தில் ஆக்க சக்தியை அதிகரிக்க தியானம் ஒரு சிறந்த மருந்து நாம் ஒரு செயலை தொடங்கும். முன்பாக தியானத்தில் முழ்கி மன ஆற்றலையும், தெளிவையும், அமைதியையும் ஒருமைப்படுத்தி செயலாற்றும் போது நம் உள்ளுக்குள் ஆற்றலும் பலமும் கூடும். ஆகவே நிசப்தமான சூழ்நிலையில் ஐம்புலனும் ஒருமிக்க தியானித்தால் சிந்தனை கூடும். எதையும் தாங்கும் வலிமையும் கூடும்.