Home சினிமா நடிகை ரிச்சாவை கண்டுபிடித்த ரசிகர்கள்

நடிகை ரிச்சாவை கண்டுபிடித்த ரசிகர்கள்

31
0
SHARE

சில வருடங்களுக்கு முன்பாக கோடம்பாக்கத்தில் முன்னனி ஹீரோயினாக இருந்த ரிச்சா கங்கோபாத்யா  பரபரப்பாக இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகினார். ஏன் விலகினார் என்பதற்கு பதில் இல்லை.

ஆனால்அவரைதிரைப்படத்தில்காணாதரசிகர்கள்இணையத்தில்தேடினார்கள். அவரின் டுவிட்டர் கணக்கை கண்டுபிடித்து அவருடன் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து டுவிட்டரில், “திரைப்படத்தில் இருந்து வெளியே வந்து 5 வருடங்கள் ஆனபிறகும், என்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான் பதில். நான் வாழ்க்கையின் புதிய பகுதியில் இருக்கிறேன். நடிப்பதற்கு லட்சியம் எதுவும் இல்லை.

நான் நடிக்க வரமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்.” என்றும், நடிப்பை விட்டால் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேனா? என்று பலர் கேட்பது வெறுப்பூட்டுகிறது.

திருமணம் தவிர வேறு லட்சியங்கள் இருக்கக்கூடாதா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிறகும் நடிக்க வருவீர்களா? என்று கேட்ட ரசிகர்களுக்குமுன்னாள் இந்திய திரைப்பட நடிகைஎன்று தனது பெயரை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.