Home விளையாட்டு டுவிட்டரில் அக்தரை வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள்

டுவிட்டரில் அக்தரை வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள்

12
0
SHARE

இஸ்லாமாபாத், அக்.28&

சமூக வலை

தளத்தில் பாகிஸ்தான் வீரர் அக்தரை இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.

இவரின் மின்னல் வேக, வேகப்பந்து வீச்சு அந்த காலத்தில் பிரசித்தம். இந்த நிலையில் இவர் சமீபத்தில் டுவிட்டரில் கருத்து ஒன்று தெரிவித்து இருந்தார்.

அதில் புனே கிரிக்கெட் மைதான பயிற்சியாளர், ஊழல் புகாரில் சிக்கியதை விமர்சித்து இருந்தார். இது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருப்பினும் இதனை இரும்பு கரம் கொண்டு அடக்குவது அவசியம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

அக்தரின் இந்த கருத்துக்கு, இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். அக்தரின் இந்த கருத்துக்கு பலரும் ரீடுவிட் செய்து இருந்தனர்.

”மிஸ்டர் சோயிப். அமைதியாக இருங்கள். சூதாட்ட ஊழலில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்களை எண்ணி பெருமை கொள்ளுங்கள்.” மற்றொரு ரசிகர், உங்கள் நாட்டு வீரர்களை பாருங்கள். இதில் உண்மை இருப்பினும் அவருக்கு (ஆடுகள பராமரிப்பாளர்) தண்டனை வழங்கப்படும். என்று குறிப்பிட்டு இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here