Home மற்றவை கந்துவட்டி கொடுமையில் அரசுஅதிகாரிகள்கடமைதவறிவிட்டனர் ராமகிருஷ்ணன் கடும் தாக்கு

கந்துவட்டி கொடுமையில் அரசுஅதிகாரிகள்கடமைதவறிவிட்டனர் ராமகிருஷ்ணன் கடும் தாக்கு

25
0
SHARE

சென்னை, அக். 28&

கந்துவட்டி கொடுமையை தடுக்கும் கடமையை தமிழக அரசு அதிகாரிகள் தவறிவிட்டதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மா நிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது: 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அதீத வட்டி வசூல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யப்படவில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் இச்சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கலாம். அந்த கடமையை செய்ய தவறி உள்ளனர். தமிழக அரசும் கடமை தவறியிருக்கிறது என்றார்.

கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குறித்துத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பா... சேர்ந்த எச்.ராஜா ஆன்மீகம் குறைந்ததால் தற்கொலைகள் நடப்பதாக தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.