Home தமிழகம் ‘திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டிவிழா: உற்சவருக்கு திருக்கல்யாண கோலாகலம்

‘திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டிவிழா: உற்சவருக்கு திருக்கல்யாண கோலாகலம்

9
0
SHARE

திருத்தணி, அக். 27&

திருத்தணி முருகன் கோவில். கந்த சஷ்டி விழாவில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

முருகனின் ஐந்தாம் படைவீடாக சிறப்பு பெற்ற திருத்தணி முருகன் கோவில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமர்சையாக நடைபெற்று வந்தது.   விழாவை முன்னிட்டு தினமும் மூலவ கடவுளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகபெருமானுக்கு காலை முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று காலை வள்ளி, தெய்வானை சமேத உற்சவக்கடவுள் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணத்தையட்டி.  கோ.அரி, எம்.பி தலைமையில் பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க, பட்டு வஸ்திரம், பழங்கள் மற்றும் சீர்வரிசை ஆகியவை மலைக்கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு மந்திரங்கள் ஓத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது காவடி மண்டபத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா என்ற முழக்கத்துடன் சுவாமி திரிசனம் செய்து வழிபட்டனர்.

திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள், குங்குமம் மற்றும் தாலிக்கயிறு வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here