Home தமிழகம் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

19
0
SHARE

சென்னை, அக். 27& திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்புகள்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கலந்தாலோசகர்  மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.  இத்திட்ட அறிக்கையினை தற்போது தொழில். நுட்ப மற்றும் நிதி மதிப்பீடு கூர்ந்தாய்வு செய்து உரிய வணிக முறையை முடிவு செய்து செயல்படுத்தப்படும்.திருச்சி, சிதம்பரம் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கல்லக்குடி  தாப்பாய் சாலையிலுள்ள காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்படும்ஏரகுடிமகாதேவி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். துலுக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.காட்டூர்இலால்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம்.

சென்னை திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில் காட்டூர் மற்றும் இலால்குடி இரயில் நிலையங்களுக்கிடையே தற்போதுள்ள இரயில்வே கடவு எண்.226க்கு மாற்றாக சாலை மேம்பாலம் கட்டப்படும்.திருச்சிராப்பள்ளி கீழ் கல்கண்டார்கோட்டை சாலையில், மஞ்சத்திடல் திருவெறும்பூர் இரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.323க்கு மாற்றாக சாலை மேம்பாலம் கட்டப்படும்.காவேரி சாலையிலுள்ள இரயில்வே கடவு எண்.249க்கு பதிலாக ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி டவுன் இரயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் கட்டப்படும். துறையூர் நகரத்திற்கு இரண்டாம் கட்ட புறவழிச்சாலை அமைக்கப்படும்.

திருச்சி முதல் நாமக்கல் வரை 77 கிலோ மீட்டர் நீளமுள்ள (மாநில நெடுஞ்சாலை எண்.25) சாலையினை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த கொள்கை அளவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் 12.5.2017ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இச்சாலையினை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின் மீது தேசிய நெடுஞ்சாலை அலகு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  கி..பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மற்றும் லால்குடி, முசிறி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மற்றும் துறையூர் மருத்துவமனைகளில் மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதலுதவி அளிக்க ஏதுவாக மாரடைப்பு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

கி..பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து எதிர் வீரிய காச நோய் வார்டு ஏற்படுத்தப்படும்திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு புதிய மருந்து கிடங்கு அமைக்கப்படும்.மணப்பாறை அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், ஆய்வக கருவிகள், டயாலிசிஸ் கருவி, எண்டோஸ்கோப் கருவி, புற்றுநோயாளி கீமோதெரபி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்மணப்பாறை வட்டத்தில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.இனாம்குளத்தூர் வட்டத்தில் கண் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். நாவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பல் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அறிவித்தார்.