Home அரசியல் ஆக்கப்பூர்வ ஆலோசனை கூறாமல் டெங்கு குறித்து கிண்டல் செய்வது ஏன்? ஸ்டாலினுக்கு, முதல்வர் கேள்வி

ஆக்கப்பூர்வ ஆலோசனை கூறாமல் டெங்கு குறித்து கிண்டல் செய்வது ஏன்? ஸ்டாலினுக்கு, முதல்வர் கேள்வி

55
0
SHARE

சென்னை, அக். 27& டெங்கு குறித்து ஆலோசனை கூறாமல் எப்போதும் கிண்டல் செய்துவது எந்த விதத்தில் நியாயம் என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது எதிர்க்கட்சித்தலைவர் நம் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். எப்பொழுது பார்த்தாலும், நம்முடைய ஆட்சியை குறை சொல்வது தான் வழக்கம்அவர் எப்பொழுது பார்த்தாலும் ஒரு வசனத்தை பேசுவார், இது குதிரைபேர அரசு என்று சொல்வார். யாரை சொல்வார் என்று நமக்குத் தெரியவில்லைஏனென்றால், விரைவிலே தீர்ப்பு வருவது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அப்பொழுது யாருடைய ஆட்சியிலே குதிரைபேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்குத் தெரியும்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு ஸ்டாலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கிறார். மழைக்காலங்களிலே சீதோஷ்ண நிலை மாறுகின்றது. அப்படி சீதோஷ்ணநிலை மாறுகின்றபொழுது, பல்வேறு  காய்ச்சல் பொதுமக்களுக்கு வருவது இயல்புபல ஆண்டுகளாக இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றது, மக்களும் அதற்கு தகுந்த சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இப்பொழுது டெங்கு காய்ச்சல் வந்திருக்கின்றது. அந்தக் காய்ச்சலை வைத்து அவர் பேட்டி கொடுக்கும்போது, இந்த ஆட்சி டெங்கு ஆட்சி என்று பெயர் சூட்டியிருக்கின்றார்.

ஆகவே அவருக்கு அவ்வளவுதான் திறமை, அவ்வளவு தான் புத்திசாலித்தனம் என்றுதான் நான் நினைக்கின்றேன்.  ஏனென்றால், காய்ச்சல் வருவது இயற்கை, அதை குணப்படுத்துவதற்கு என்ன ஆலோசனை என்று சொன்னால், அது உண்மையிலேயே எதிர்க்கட்சித்தலைவருக்கு பாராட்டிற்குரியதுஅதை விட்டுவிட்டு, வேண்டுமென்றே கிண்டல் செய்வது, கேலி செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பதை இந்த நேரத்திலே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்டெங்கு கொசு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொன்னால், பொதுமக்களுடைய ஒத்துழைப்பு அரசுக்கு தேவை. அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் டெங்கு கொசு முற்றிலும் ஒழிப்போம், டெங்கு காய்ச்சலை தடுப்போம் என்று இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தி.மு.. ஆட்சி என்ன செய்தது என்று எண்ணிப் பாருங்கள்.  நம்முடைய இருபெரும் தலைவர்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தார்கள் என்று ஒப்பிட்டுப்பாருங்கள். திமுக ஆட்சியில் ஒன்றையாவது சொல்லமுடியுமா.? ஆகவே, இருபெரும் தலைவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்ததன் மூலம் இந்த மாவட்டம் வளர்ச்சிப் பாதையிலே சென்று கொண்டிருக்கின்றது. மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திலே இருந்தது. திமுக அதில் பங்கு பெற்றது. அப்பொழுது காவிரி நதிநீர் பிரச்சினை வந்தது. அதற்காக குரல் கொடுத்தார்களா.? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா.? இல்லை. ஆட்சி அதிகாரத்திலே, பதவி சுகத்தைக் கண்டார்கள், இந்தெந்த இலாகா வேண்டுமென்று கேட்டு பெற்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை.  ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உச்சநீதிமன்றத்தின் மூலமாக நமக்கு கிடைத்தது. ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கின்றது.  காவிரி நீர் பாசனம் பெறுகின்ற பகுதியாக இருக்கின்றது. அந்த மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக மறைந்த முதல்வர் சட்டப் போராட்டம் நடத்தி, நமக்கு தீர்வு தந்த ஆட்சி அதிமுக ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

மாற்று சக்திக்கு இடம் அளிக்காதீர்கள் கட்சியினருக்கு முதல்வர் அட்வைஸ்

திருச்சியில் நடைபெற்ற எம்ஜிஆர்  நூற்றாண்டுவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.

காட்டில் நிலவாய் கடலில் மழையாய் பிறந்தால்யாருக்கு லாபம்; பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்“” என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை மனதில் ஏற்றுங்கள். நீங்கள்..ஒத்த கருத்துடன்.. ஒற்றுமையாக செயலாற்றுங்கள். உங்கள் ஒற்றுமைதான்.. இந்த கட்சியையும், ஆட்சியையும் வலிமைப்படுத்தும். இன்றைக்கு அதிமுக எஃகு கோட்டையாக இருக்கிறது என்றால் அதற்கு  தொண்டர்களின் ஒன்றுமைதான் முழுக் காரணம் என்பது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் தெரியும். நமக்குள் பிளவை உண்டாக்கும்.மாற்று சக்திக்கு ஒரு காலமும் இடம் கொடுக்காத அளவிற்கு  நாம் ஒற்றுமையாக  மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாற்றுக் கட்சியினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆதாரம் இல்லாத குறைகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறைகூறுபவர்கள் குறைகூறிக் கொண்டுதான் இருப்பார்கள். குறைகளுக்கு அவர்களால் தீர்வு சொல்லத் தெரியாது. இவ்வாறு பேசினார்.