Home இந்தியா தவறான விளம்பரங்களில் இருந்து மக்களை காக்க புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரதமர் நரேந்திர மோடி...

தவறான விளம்பரங்களில் இருந்து மக்களை காக்க புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி 

23
0
SHARE

 நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், புதிய நுகர்வோர் சட்டம் இயற்றப்படும் என டெல்லியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட  கூறினார். புதுடெல்லி, அக். 27&

தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 24 நாடுகள் பங்கேற்றன.

இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  துவக்கி வைத்தார். அவருடன் மத்திய உணவு, நுகர்பொருள் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் பங்கேற்றார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:புதிய இந்தியாவின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது.இதன்மூலம் தவறான தகவல்களை விளம்பரம் செய்தால் அதன்மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசத்தின் முன்னேற்றத்துக்கு நுகர்வோரின் பாதுகாப்பு அவசியமானதுஎதிர்காலத்தின்வளர்ச்சியைகருத்தில்கொண்டுஇந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டது.போலியான, தவறான தகவல்களை விளம்பரப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

எனவே அதனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தோடு இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன்மூலம் கடந்த 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. இது தற்போதைய மற்றும் எதிர்கால நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இருக்கும்நாட்டின் பொருளாதாரம் சீர்திருத்தப்பட்டு வருகிறது. இதனால் வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிப்படையவில்லை. பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. காரணமாக அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு நேரடி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது. இதில் நுகர்வோர் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தியுள்ளது.ஜி.எஸ்.டி. முறையால் நிறுவனங்களின் இடையிலான போட்டி அதிகரித்துள்ளதுஇது வளர்ச்சியை அதிகப்படுத்தும். எனவே பொருளின் மீதான விலை குறையும். அதனால் ஏழைகளும், நடுத்தர குடும்பங்களும் பலன் அடைவர் என்றார்.