Home தமிழகம் மீனாட்சி செவிலியர் கல்லூரியில் சுற்றுப்புற பாதுகாப்பு நிகழ்ச்சி

மீனாட்சி செவிலியர் கல்லூரியில் சுற்றுப்புற பாதுகாப்பு நிகழ்ச்சி

24
0
SHARE

சென்னை, அக். 27& சென்னை மாங்காட்டில் உள்ள மீனாட்சி செவிலியர் கல்லூரியில் மீனாட்சி பல்கலைகழகத்தின் அறங்காவலர் எ.என்.ராதாகிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி சுற்றுப்புற பாதுகாப்பு குழுவின் மேலாண்மையின் படி பெண்கள் பயன்பாட்டிற்கான சுகாதாரமான நாப்கின் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர். மகேஸ்வரி ஜெயகுமார் துவங்கி வைத்தார். மேலும், நாப்கின் பெண்கள் பூச்சரம் மகளிர்குழு செயலாளர் நாகலெட்சுமி கலந்து கொண்டு அறிவுரை ஆற்றினார். கல்லூரியின் துணைமுதல்வர் டாக்டர். வைஜெயந்திமாலா பெண்களின் மாதவிடாய் சுத்தத்தை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வை உண்டாக்கினார். மேலும், கல்லூரியின்

சுற்றுப்புற பாதுகாப்பு குழுவின் பொறுப்பாளர் சூரியா ஆகியோரின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் சுகாதாரமான நாப்கினை பயன்படுத்தும் முறையையும், அதன் நன்மையையும் நாகலெட்சுமி விளக்கமாக எடுத்துரைத்தார். அதைப்பற்றி மாணவிகளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை வழங்கினார். அதனால் மாணவிகள் மிகவும் பயனுற்றனர்.