Home சுடச்சுட செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க மாட்டேன் மம்தா பானர்ஜி பிடிவாதம்

செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க மாட்டேன் மம்தா பானர்ஜி பிடிவாதம்

39
0
SHARE

கொல்கத்தா, அக். 26& செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மத்திய அரசு மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தில் தலையிடுகிறது. இது தவறாகும். ஒருவரின் செல்போன் எண் ஆதாருடன் இணைக்கப்பட கூடாது. எனது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் நான் இணைக்க மாட்டேன்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை. ஆனால் எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை. நாங்கள் இதற்கு எதிராக போராடுவோம்.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழலாகும். இதுகுறித்து மன்மோகன் சிங் மற்றும் யாஷ்வந்த் சின்ஹா ஆகியோர் விமர்சனம் செய்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட நவம்பர் 8ம் தேதி கருப்பு தினமாக எங்கள் கட்சியில் உள்ளவர்களால் அனுசரிக்கப்படுகிறதுநாட்டை ஆளும் ஆசை எங்களுக்கு இல்லை. ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் பா...வை மத்தியிலிருந்து கண்டிப்பாக வெளியேற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.