Home சினிமா அஜித் படத்தில் வேலைக்காரியாகவும் நடிக்க தயார்: ஓவியா

அஜித் படத்தில் வேலைக்காரியாகவும் நடிக்க தயார்: ஓவியா

50
0
SHARE

ஓவியாவை தங்கள் படத்தில் ஒரு காட்சியலாவது நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஓவியாவுக்கு யாருடன் நடிக்க ஆசை என்பதை அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியிருக்கிறார்.

நான் பல படங்களில் நடிப்பதாக செய்திகள் வருகிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க முடியாது. தற்போது நான்காஞ்சனாபடத்தின் அடுத்த பாகத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எந்த போட்டியிலும் இல்லை.

நான் எனது வருமானத்துக்காக வேலை தேடியபோது மாடலிங் செய்தேன். பின்னர்களவாணிபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஆனேன். ரசிகர்கள் ஆதரவால் இந்த அளவு வளர்ந்திருக்கிறேன்.

இப்போது எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கிறார். அவர் எனது தாய். தளபதி விஜய், தல அஜித் இருவரும் எப்போதும் மாஸ்தான். அவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல எல்லோரையும் பிடிக்கும். அஜித் படத்தில் எந்த பாத்திரத்திலும் நடிக்க தயார். வேலைக்காரியாக கூட நடிப்பேன்”. என்று கூறியிருக்கிறார்.